புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


ஜனாதிபதி மகிந்த, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோரை எதிர்வரும் 20ம் திகதி சந்திப்பார்: பீரிஸ்
இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இந்திய புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் 20ஆம் திகதி இச்சந்திப்பினை ஜனாதிபதி மேற்கொள்வார் என தெரிவித்துள்ள அவர், அத்துடன் 21ஆம் திகதி ஆந்திர பிரதேசத்திலுள்ள சாஞ்சியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையர்கள், தமிழ் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் தற்போது விதிக்கப்பட்டுள்ளது பயண எச்சரிக்கை நிலையானதல்ல. அங்குள்ள நிலைமைகள் ஆராயப்பட்ட பின்னர் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ad

ad