புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2012


300 படகுகளில் வந்து கடற்கரை வழியாக தூத்துக்குடி துறைமுகம் முற்றுகை
கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்செப்டம்பர் 22ம் தேதியான இன்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.



அதன்படி நெல்லை, தூத்துக்குடி,குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான பஞ்சல், பெருமணல், இடிந்தகரை, உவரி,ஆலந்தழை மணப்பாடு,திருந்செந்தூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கடற்கரை கிராம மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் கடல் வழியாக வந்தனர்.

தூத்துக்குடி வ.சு.சிதம்பரனார் துறைமுக பொருப்பு கழகத்தின் முன்பு தற்போது 250விசைப்படகுகள், 300 நாட்டுப்படகுகள் முற்றுகையிட்டுள்ளனர்.  அந்த ஒவ்வொரு படகிலும் 10 முதல் 15 மீனவர்கள் உள்ளனர்.
துறைமுக பாதுகாப்பிற்காக தமிழ்நாடு போலீஸ் மத்திய தொழிற்துறை பாதுகாப்புத்துறைமற்றும் துறைமுக போலீஸ் பாதுகாப்புப்படை கடலோர பாதுகாப்பு படை ஆகியவைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே துறைமுக பணிகளில் எந்தவித தேக்கமும் இல்லாமல் வழக்கம் போல்நடைபெற்று வருகின்றன.  

ad

ad