புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2012


சென்னை கலவரம் : 500 பெண்கள் சாலை மறியலால் பதட்டம்
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் கலவரத்தால் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில்  500 பெண்கள் குவிந்தனர்.  சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய கொல்கத்தா நெடுஞ்சாலை என்பதால் கனரக வாகனங்கள், பேருந்துகள்,இதர வாகனங்கள் கடந்து செல்ல முடியாத ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டது.

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் விநாயகர் ஊர்வலம் நடப்பதாக இருந்தது.  குறிப்பிட்ட பகுதியில் பிள்ளையார் ஊர்வலம் செல்வதை மற்றொரு பிரிவினர் தடுத்தனர்.  இதனால் இன்று காலையில் இருந்தே நேதாஜி நகரில் இருந்து போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா இணை கமிஷனர் செந்தாமரை கண்ணன், துணைகமிஷனர்கள் அன்பு, மகேஷ்வரன்,லஷ்மி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.


இந்நிலையில் இதே பகுதியைச்சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஜெகன்(40) என்பவரின் மண்டை உடைக் கப்பட்டது. 

இந்த மண்டை உடைப்புக்கு போலீஸ்தான் காரணம் என்றும் ,  மற்றொரு பிரிவினர்தான் காரணம் என்றும், மாறி மாறி குற்றம் சொல்லப்பட்டு வருகிறது.

இதனால் அந்த பகுதி பரபரப்பில் மூழ்கியது.  100க்கணக் கான போலீசாரை மீறி, பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முற்பட்டனர்.  இதில் ஏராளமான பெண்களும் அடங்குவர். 
இந்துமுன்னணியைச்சேர்ந்த இளைஞர்கள் தனியே சாலையில் அமர்ந்து கோஷம் போட ஆரம்பித்து விட்டனர்.  நிலைமை கட்டுக்குள் மீறி போனதால், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  இதனால் அதிகம் மக்கள் தொகை உள்ள நேதாஜி நகர் பகுதி பதட்டத்துடன் காணப்படுகிறது. 

அனைத்து சாலை நுழைவிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளூக்கு திரும்பமுடியாமல் அச்சத்துடன் உள்ளனர். 

ad

ad