புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012


பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 இலங்கையர் இன்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்
பிரிட்டனில் இருந்து சுமார் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மற்றும் விசா காலம் முடிந்த பின்னும் இங்கு தங்கிய போன்ற பலதரபட்டவர்கள் அடங்கிய சுமார் 60 பேர் இன்று பிற்பகல் பிரிட்டிஷ் எல்லை நிறுவன அதிகாரிகளால் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் அவர்களது நாடுகளுக்கு திரும்ப அனுப்பப்படுவதாகத் தெரிகிறது.
இந்த நடவடிக்கையில், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன.
திரும்ப அனுப்பினால் சித்திரவதை நிச்சயம்
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்கு திரும்ப அனுப்பப்படும் நிலையில் லண்டனில் உள்ள தடுப்புக்காவல் மையம் ஒன்றிலிருந்து தமிழோசைக்குப் பேட்டியளித்த ஒரு இலங்கைத் தமிழர், தான் விடுதலைப்புலிகளின் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு உதவி செய்ததால், இலங்கை பாதுகாப்புப் பிரிவினராலும், கருணா குழுவினராலும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பின்னர் தப்பியோடி பிரிட்டன் வந்ததாகவும் குறிப்பிட்டார்.
இப்போது தனது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தன்னை இலங்கைக்கு திரும்ப அனுப்பினால், மீண்டும் தான் சித்ரவதைக்கு உள்ளாவது நிச்சயம், தான் கொலைசெய்யப்படவும் கூடும் என்றார்,
பெயர் வெளியிடவிரும்பாத அந்த இலங்கைத் தமிழர்.
இலங்கையில் நடந்து முடிந்த போரில், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் அல்லது அவர்களுக்கு உதவியதாகக் கருதப்படுவர்கள், இலங்கைக்கு திரும்ப அனுப்பப்பட்டால் அவர்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கக் கூடும் என்று Freedom From Torture (சித்jpரவதையிலிருந்து விடுதலை) என்ற தன்னார்வ அமைப்பு கூறுகிறது.
இந்த அமைப்பைச் சேர்ந்த மார்க் பெனிக் இது பற்றிக் கூறுகையில்,
ஐக்கிய ராஜ்யத்தின் எல்லைகள் நிறுவனம் என்ற துறை, இன்று ஒரு சிறப்பு விமானத்தில், இலங்கையர்கள் பலரை ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு வெளியேற்ற ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சுமார் 60 பேர் வரை இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30க்கு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்கள். இதில் பலர் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள்.
எங்கள் அமைப்பான Freedom From Torture என்ன சொல்கிறது அல்லது இந்த விஷயத்தில் எங்கள் ஆராய்ச்சி எதைக்காட்டுகிறது என்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்த அல்லது தொடர்பு வைத்திருந்ததாகக் கருதப்படும் எந்த ஒரு தமிழரும், இலங்கைக்கு திரும்ப அனுப்ப்ப்பட்டால் அவர் சித்jpரவதை செய்யப்படும் அபாயம் இருக்கிறது என்பதுதான்.
அவர்கள் இங்கே பிரிட்டனில் அவர்களை திரும்ப அனுப்பாதிருக்க, அவர்களுக்கிருக்கும் சட்டபூர்வமான மேல்முறையீடு போன்ற வழிகளை எல்லாம் பயன்படுத்தி முடித்திருப்பார்கள்தான்.
ஆனால் கடந்த 48 மணி நேரத்தில், அவர்களில் குறைந்தது மூவராவது, அவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக கடைசி நிமிடத் தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள்.
அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் பின்போடப்பட்டிருக்கின்றன என்றார்.
'இவர்களில் பெரும்பாலோனோர் பொருளாதார அகதிகள்'
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசிக்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர், ராஜீவ விஜேசிங்க, . இது குறித்து பிரிட்டிஷ் அதிகாரிகள் முன்பே ஆராய்ந்திருக்கிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக, சரியாகவே அவர்கள் இது குறித்து கரிசனையுடன் இருந்திருக்கிறார்கள்.
இலங்கைக்கு திரும்ப அனுப்படுபவர்கள் இது போன்று கூறப்படும் அளவில் சித்ரவதைக்கு ஆளாவதில்லை என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்றார்.
மேலும் இவர்கள் பொருளாதார அகதிகள் என்று குறிப்பிட்ட ராஜிவ, இவர்கள் தங்கள் எஞ்சியுள்ள வாழ்நாளை பிரிட்டனிலேயே கழிக்க முடிவு செய்தவர்கள்,
இவர்கள் கூறுவதை நம்பி இவர்களை பிரிட்டனிலேயே வைத்துக்கொள்வது என்பது பிரிட்டிஷ் அரசு எடுக்கவேண்டிய முடிவு.
இலங்கையில் நல்லிணக்க வழிமுறை கடந்த சில மாதங்களாக நல்ல முறையில் நடந்து வருகிறது,
பெரும்பாலான இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குப் போய்விட்டார்கள்.
சுமார் 11,000 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் அரசாங்க புனர்வாழ்வுத் திட்டங்களில் பலன்பெற்று, சமூகத்தில் இணைந்திருக்கிறார்கள். இவர்களும் அதேபோல இலங்கை திரும்பலாம் அல்லது பிரிட்டனிலேயே இருக்கலாம் என்றார்.
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கை திரும்பியவர்கள் சித்திரவதைக்குள்ளாகிறாh;கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற நிறுவனங்கள் கூறுவதை மறுத்த இவர், இந்த விஷயத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம்  உண்மைகளைத் திரித்துக் கூறி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

ad

ad