புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2012

சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: இலங்கை அணியை நியூசிலாந்து சமாளிக்குமா
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிந்தது. லீக் முடிவில் இங்கிலாந்து, இந்தியா (ஏபிரிவு), ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ் (பிபிரிவு), இலங்கை, தென்ஆப்பிரிக்கா (சி பிரிவு), பாகிஸ்தான், நியூசிலாந்து (டிபிரிவு) ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. 

முன்னணி அணிகள் எதுவும் அதிர்ச்சிகரமாக வெளியேற்றப்படவில்லை. ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஜிம்பாப்வே, வங்காளதேச அணிகள் வாய்ப்பை இழந்தன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. 

'இ' பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், எப் பிரிவில் 2007-ம் ஆண்டு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா 2009-ம் ஆண்டு சாம்பியன் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 

சூப்பர் 8 சுற்று நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த சுற்றில் தினசரி 2 ஆட்டம் நடக்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இ பிரிவில் உள்ள இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இலங்கை அணி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 82 ரன்னில் வென்றது. தென் ஆப்பிரிக்காவிடம் 32 ரன்னில் தோற்றது. சொந்த மண்ணில் விளையாடுவதால் இலங்கை அணி அதிக நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணியில் கேப்டன் ஜெயவர்த்தனே, சங்ககரா, தில்சான், ஜிவன் மெண்டீஸ், மேத்யூஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், அஜந்தா மெண்டீஸ், குலசேகரா போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். 

நியூசிலாந்து அணி இலங்கையை சமாளிக்க கடுமையாக போராடும். அதே பிரிவில் தலைசிறந்த வீரர்களை கொண்டுள்ள அந்த அணி இலங்கைக்கு அதிர்ச்சி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. மேக்குல்லம் அதிரடியாக விளையாடினால் இலங்கை அணியின் நிலை திண்டாட்டம் தான். அதோடு வில்லியம்சன், பிராங்ளின், ஜேக்கப் ஓரம் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளார். 

உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் இலங்கை 2 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் வெற்றி பெற்றன. 

இதே பிரிவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது. இந்தியாவிடம் 90 ரன்னில் மோசமாக தோற்றது. அந்த அணியில் கீவ்ஸ்வெட்டர், மார்கன், லுகே ரைட் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களும் சுவான், கேப்டன் பிராட் போன்ற சிறந்த புவலர்களும் உள்ளனர். 

இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வியில் இருந்து அந்த அணி பாடம் கற்று இருக்கும். வெஸ்ட் இண்டீசை தோற்கடிக்க கடுமையாக போராடும். வெஸ்ட்இண்டீஸ் அணியில் பேட்டிங்கில் கெய்ல், சாமுவேல்ஸ், நல்ல நிலையில் உள்ளனர். கெய்ல் ஆட்டத்தை பொறுத்து அந்த அணியின் ரன் குவிப்பு இருக்கும். 

வெஸ்ட்இண்டீஸ் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அயர்லாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளும் பலம் பொருத்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பையில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசே வெற்றி பெற்றது.

ad

ad