புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2012

BBCயில் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு திரு சம்பந்தர் பதில்
பிரேமச்சந்திரன் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு திரு சம்பந்தர் பதில் இறுத்திருக்கிறார். எதுவாக இருந்தாலும் கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையோடு அவர் சொன்னார். அதுதான் எனது கருத்தும்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் �கூட்டமைப்பிற்கு ஒரு சரியான யாப்போ, அன்றி அதற்கான ஒருவடிவமோ இதுவரை இல்லை. அது மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு பொதுச்சின்னமோ கொடியோ எதுவும் கிடையாது" என்கிறார். பின்பு எப்படி தன்னைமட்டும் ததேகூ இன் உத்தியோகப் பேச்சாளர் என்று ஓயாது சொல்லிக் கொண்டிருக்கிறார்?

"இயங்கிவரும் இவ்வமைப்பிற்கு குறைந்த பட்சம் நிதிக்குழுவென்று ஏதாவது இருக்கின்றதா?" என்று மாண்புமிகு சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்கிறார்.

அதுதான் கடந்த தேர்தலில் ததேகூ சர்வதேசம் (Tamil National Alliance Global ) என்ற பெயரில் Pay Pal மூலம் நிதி திரட்டினதற்குக் காரணமா? இந்த நிதிக்கு என்ன நடந்தது? தனது கட்சி சார்பாக நிதி திரட்டியிருக்கலாமே? பலர் ததேகூ நிதி சேகரிப்பதாக நினைத்துக் கொண்டு நிதி அளித்திருக்கிறார்கள்.

மட்டக்களப்பில் இபிஆர்எல்எவ் போன்ற கட்சிகளுக்கு 4 இடத்தில் வெற்றி என்கிறார். ஆனால் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் வென்றால் மக்கள் தமிழரசுக் கட்சிக்குப் போடவில்லை ததேகூ க்குப் போட்டார்கள் என்று தட்டை மாற்றுகிறார்!

ஒரு நாட்டின் சனாதிபதி அழைத்தால் அவரைப் போய் பார்க்க வேண்டும். அதைத்தான் சம்பந்தர் செய்தார். சம்பந்தர் அந்தச் சந்திப்பைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்த சம்பூர் மக்களும் வலிகாமம் மக்களும் மீள்குடியமர்த்தப் படவேண்டும் என்று வலியுறுத்தினார். வெற்றி பெற்ற ததேகூ மாகாண சபை உறுப்பினர்களை ஆளும் கட்சி பேரம் பேசி விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். இதனை முதலில் மறுத்த மகிந்தா பின்னர் இந்தியா சென்று திரும்பிய பின்னர் பார்க்கலாம் என்றார். இதனை ஒரு அறிக்கை மூலம் சம்பந்தர் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் "பல சமயங்களில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்குப் போகுமுன்பும், ஜெனிவா மகாநாட்டிற்கு முன்பாகவும் சம்பந்தன் அவர்களுடன் பேச அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக தனக்கு வரும் அழுத்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவே இச்சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வந்தார். சம்பந்தன் அவர்களும் இச்சந்திப்புக்களின் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் கிட்டப்போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்டும் இச்சந்திப்புக்களின் மூலம் இலங்கை அரசாங்கம் தனக்கு வரும் வெளிநாட்டு அழுத்தங்களைக் குறைக்கவே முயற்சிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டும் சம்பந்தன் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.

இந்தத் தொடர் சந்திப்புக்கள் கூட தனிப்பட்ட சந்திப்புக்களாகவும் கூட்டமைப்புடன் கலந்துரையாடாத சந்திப்புக்களாகவுமே இருந்து வந்துள்ளன� என்கிறார். ஒரு வாதத்துக்கு பிரேமச்சந்திரன் சொல்வதை ஏற்றுக்கொள்வதாக வைத்துக் கொள்வோம். இந்தியாவுக்கு போகுமுன்னர்தான் சம்பந்தர் இராசபக்சேயைச் சந்தித்தார். ஆனால் இராசபக்சே சந்தித்த அதே இந்தியப் பிரதமரை ததேகூ யை சந்திக்கப் போகிறது என பிரேமச்சந்திரனே சொல்கிறார். அந்தக் குழுவில் பிரேமச்சந்திரனும் ஒருவர்.

அப்படியென்றால் மகிந்த இராசபக்சேயைக் காப்பாற்றத்தான் இந்தச் சந்திப்பா? இந்தச் சந்திப்புகளால் ஒரு எவ்வித நன்மையும் கிட்டப் போவதில்லை என்றால் பின் ஏன் பிரேமச்சந்திரன் இந்திய பிரதமரை சந்திக்கப் போகிறார்? ஏன் அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகளோடு சந்தித்துப் பேசினார்? பேசிப் பயனில்லை என்றால் பழையபடி ஆயுதத்தை அவர் தூக்கப் போகிறாரா? அல்லது தூக்க வேண்டும் என்று சொல்லப் போகிறாரா?

�சனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாக தனக்கு வரும் அழுத்தங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவே இச்சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வந்தார்� என்கிறார். இது ஒரு அடி முட்டாள்த்தனமான வாதம். ஒரு பேச்சுக்கு மகிந்தாவை சம்பந்தனால் காப்பாற்ற முடியும் என்று வைத்துக் கொள்வோம்? இப்போது மகிந்த இராசபக்சாவை தூக்குக் கயிற்றில் தொங்கப் போட அனைத்துலக சமூகம் கங்கணம் கட்டிக் கொண்டா நிற்கிறது?

இந்தியா அவருக்கு செங்கம்பள வரவேற்புக் கொடுக்கிறது. சீனா பொருளாதார, இராணுவ, கட்டுமான உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ் அரசுக் கட்சிதான் கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சி. அப்படியிருந்தும் கடந்த தேர்தலில் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு 11 இடங்களை ஒதுக்கிக் கொடுத்தது. அதாவது நாலில் ஒன்று. அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எடுத்துக் கொண்டால் நூற்றுக்கு நூறு சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்குத்தான் நியமனம் கொடுத்தது!

ஆனால் பிரேமச்சந்திரன் �13 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய திருமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 10 இடங்களும், ஏனைய நான்கு கட்சிகளுக்கு 3 இடங்களும் கொடுக்கப்பட்டது. 14 வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 9 இடங்களும் ஏனைய நான்கு கட்சிகளுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டது. அதேபோன்றுதான் அம்பாறை மாவட்டத்திலும் நடைபெற்றது. இவ்வாறான ஒரு சர்வாதிகார தேர்தல் கூட்டைத்தான் சம்பந்தன் விரும்புகிறார்போல் தெரிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல் இருப்பதன் மூலம் சம்பந்தன் பேசுவதையும் செய்வதையும் ஏனையோர் கேட்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தமிழரசுக் கட்சி விரும்புகின்றது" எனப் புலம்புகிறார்.

மேலும் "திருமலை மாவட்டத்தில் வெற்றியீட்டியவர்களும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்றே வெற்றியடைந்தார்கள். இவ்வாறே அம்பாறை மாவட்டத்திலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளனர். எனவே மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களே தவிர, தமிழரசுக்கட்சிக்கல்ல என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்" என்கிறார்.

ஆக தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் அவர்கள் ததேகூ என்ற காரணத்தினால் வெற்றி பெற்றார்கள். அய்ந்து கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அது அந்த அய்ந்து கட்சிகளின் செல்வாக்கால் வெற்றி பெற்றார்கள் என்கிறார். இது என்ன நியாயம்? தலை விழுந்தால் எனக்கு வெற்றி. பூ விழுந்தால் உனக்குத் தோல்வி என்கிறார் பிரேமச்சந்திரன்.

தமிழரசக் கட்சி 11 இடங்களை ஒதுக்கிக் கொடுத்ததே பெரிய காரியம். அய்ந்து கட்சிக்கும் வேட்பாளர்கள் சமமாகப் பிரிக்க வேண்டும் என்று கேட்டு, பின்னர் 50:50 கேட்டு அதுவும் கிடைக்கவில்லை என்ற பின்னர்தான் 11 இடங்களை ஏற்றுக் கொண்டார்கள். வேட்பாளர் எண்ணிக்கையில் அய்ந்தில் ஒன்று கேட்பது, பின்னர் பாதி கேட்பது என்ன அடிப்படையில் நியாயம்? அப்படிக் கொடுத்த இடங்கள் போதாதென்றால் தனித்துப் போட்டியிட்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அரசியல் தற்கொலைக்குத் தயார் இல்லை என்பதுதானே காரணம்?

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் கேட்ட ஆனந்தசங்கரியாரின் லெட்டர் பாட் கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைத்த வாக்குகள் வெறுமனே 4,424 தான்! திருகோணமலை மற்றும் அம்பாறையில் அந்தக் கட்சி போட்டியிடவே இல்லை! ஆக மொத்தம் 44 வேட்காளர்களில் ஆனந்தசங்கரியின் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பிரேமச்சந்தின் நினைக்கிறாரா? அப்படி நினைத்தால் அது புத்திசாலித்தனமா?

ததேகூ யை உள்ளிருந்து கொண்டு குடைச்சல் கொடுக்கிற அதனைச் சிதைக்கிற பிரேமச்சந்திரன் ததேகூ பதிவு செய்யப்பட்ட பின்னர் குடைச்சல் கொடுக்க மாட்டார் சிதைக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஜெனிவாவுக்க போவதில்லை என்று கூடிப் பேசி முடிவு எடுத்த பின்னரும் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி அந்து முடிவுக்கு எதிராகப் பேசியது எந்தவகை உட்கட்சி சனநாயகம்?

ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்றியது போல பிரேமச்சந்திரன் ததேகூ கடிதத் தலைப்போடு நடையைக் கட்ட திட்டமிடுகிறாரா? ததேகூ இல் இருக்கும் ஏனைய கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் எதுவும் விடவில்லை. இவர் மாத்திரம் ஏன் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்? ஏனைய கட்சிகள் சார்பாக பேசும் பிரேமச்சந்திரன் அந்தக் கட்சிகளைக் கேட்டுவிட்டா? அவர்களோடு பேசிவிட்டா? இப்படியான அறிக்கைகளை செய்தித்தாள்களுக்கு விடுகிறார்?

ததேகூ பதிவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அதன்பின் இபிஎல்ஆர்எவ் கட்சியைக் கலைக்க பிரேமச்சந்திரன் சம்மதமா?

"ஐந்து கட்சிகளும் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தால் ஒருவர்மீது ஒருவர் சேறடிக்க முயற்சிப்பார்களா அல்லது ஒற்றுமையுடன் செயற்படுவார்களா?" என்று பிரேமசந்திரன் ஒரு பாமரத்தன்மையான கேள்வியைக் கேட்கிறார். இப்போது சேறடிக்கும் பிரேமச்சந்திரன் ததேகூ பதிவு செய்து விட்டால் மாத்திரம் சேறடிக்க மாட்டார், தூற்றமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? திரு சம்பந்தரை பெயர் சொல்லி ஒருமையில் பேசுகிறவர் அப்புறம் அஃறிணையில் பேச மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் பல கட்சிகள் தங்கள் தனித்தன்மையை பேணிக்கொண்டு இயங்கி வருகின்றன. அதில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிதான் முதன்மைக் கட்சி. அது போலத்தான் ததேகூ இல் தமிழரசுக் கட்சிதான் முதன்மைக் கட்சி. இந்த உண்மை பிரேமச்சந்திரன் தவிர மற்றவர்களுக்குத் தெரியும். புரியும்.

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ததேகூ போடு பாரதூரமான கருத்து வேற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் அரசுக் கட்சியின் முதன்மை வகிபாகம் பற்றி கருத்து முரண்பாடு இருக்கிறது. "கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையை தமிழரசுக் கட்சியும் அதனை வழிநடாத்தும் தலைவர்களும்தான் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இன்று உலகறிந்த உண்மை" என மனதார நம்புகிறார். இவையெல்லாம் சரியென்றால் அவருக்கு ஒரு வழி இருக்கிறது. அவருக்கு ஒரு மாற்றுவழி இருக்கிறது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போல இவரும் ததேகூ விட்டு வெளியேறி இன்னொரு கட்சியைத் தொடக்கலாம். அல்லது இருக்கிற கட்சியைப் பலப்படுத்தலாம். தேர்தலில் போட்டியிட்டு கட்டுக்காசையும் இழக்கலாம்.

இதில் எது அவருக்கு வசதியோ அதனை அவர் செய்யலாம். அதுதான் அரசியல் அறம் என நான் நினைக்கிறேன்.

ad

ad