புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2012


விடுதலைப் புலிகள் மீதான தடை! தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் பதிவு
விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு சரியான காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக சட்ட விரோத நடவடிக்கைகள் தீர்ப்பாயம் சென்னையில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் விசாரணை மேற்கொண்டது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், தமிழக கியூ பிரிவு எஸ்.பி. சம்பத் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
இந்த ஆவணங்கள் 2 பெரிய தொகுப்புகளாக சீல் வைக்கப்பட்ட உறைகளில் அளிக்கப்பட்டன.
அதில் விடுதலைப்புலிகளும், அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் என்று அவர் கூறினார்.
மேலும் விடுதலைப் புலிகளின் அரசியல் அணியான மக்கள் முன்னணி சார்பில் தமிழகத்தையும், ஈழத்தையும் இணைத்து விரிந்த தமிழகம் அமைக்கும் திட்டம் இருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சம்பத் கூறினார்.
ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதை மறுத்து வாதிட்டார்.
விடுதலைப் புலிகளுக்குத் தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இருந்ததில்லை. மக்கள் முன்னணி 1991-லேயே கலைக்கப்பட்டுவிட்டது என்றும் வைகோ கூறினார்.
இதற்கு சம்பத், அந்த அமைப்பு கலைக்கப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் விடுதலைப்புலிகள் வெளியிடவில்லை. மேலும் அந்த அமைப்பில் சார்பில் வலைதளங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று வாதிட்டார்.
இந்த விசாரணை சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
இதன் பின் நீதிபதி வி.கே.ஜெயின் அடுத்த விசாரணை கொடைக்கானலில் அக்டோபர் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் உத்தரவிட்டார்.

ad

ad