புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2012

பேலியகொட பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் ஐந்து வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள பலகைகளினால் அமைக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகப் பேலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயைக்

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருந்தபோதும் பலகையால் அமைக்கப்பட்டவை என்பதால்  குறுகிய நேரத்திற்குள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இவ்விபத்துக்கான காரணம் என்னவென இதுவரையில் கண்டறியப்படவில்லை அத்தோடு இவ்விபத்தினால் பொருட் சேதங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும் எவருக்கும் காயங்களோ, உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லையெனத் தெரிவிக்கும் பேலியகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad