புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2012


புலித் தலைவர்களுக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை
தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக மௌபிம சிங்களப் பத்திரிகை பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச ஆலோசனை அமைப்பு ஒன்றின் அனுசரணையில் இந்த சந்திப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றுள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராகக் கருதப்படும் அருட்தந்தை இமானுவல் மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோரை குறித்த முன்னாள் அமைச்சர் சந்தித்துள்ளார்.
குறித்த முன்னாள் அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தவர் எனவும், ஆளும் கட்சியின் முக்கிய ஆலோசகர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களும் சில நிபந்தனைகளை அரசாங்கத்திற்கு விதித்துள்ளதாக மௌபிம சிங்களப் பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad