புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2012

புகைபிடிக்கும் கூடங்களை அகற்ற வேண்டாம்: தேசிய வாக்கெடுப்பில் முடிவு
சுவிட்சர்லாந்தில் மதுபானக்கூடம் அலுவலகம், மனமகிழ் மன்றம், உணவு விடுதி போன்ற இடங்களில் புகைபிடிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள கூடங்களை நீக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவிடங்களில் புகைக்கும் பழக்கம் இரண்டாம் கட்ட புகைபிடித்தலுக்கு உதவும் வகையில் இருப்பதால் இப்பழக்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற பொதுமக்கள் எடுத்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 23ம் திகதி இதற்கான பொதுவாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில் மக்களின் ஆதரவு குறைந்திருப்பதாக சுவிஸ் ஒலிபரப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
GFS பெர்ன் ஆராய்ச்சி மற்றும் வாக்கெடுப்பு நிலையத்தின் அரசியல் விஞ்ஞானியான மார்ட்டினா இம்ஃபெல்ட், புகை பிடிக்காதவர்களும் அரிதாக புகை பிடிப்பவர்களும் கூட புகைபிடிக்கும் கூடங்கள் தனியாக அமைப்பதை எதிர்த்து வாக்களிக்கவே விரும்புகின்றனர்.
புகை எதிர்ப்பாளர்கள் சுவரொட்டி மற்றும் செய்தித்தாள் மூலமாக விளம்பரம் செய்தாலும் கூட வாக்காளர் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை. மக்கள் ஆதரவு குறைந்ததற்குக் காரணம், விடுதி உரிமையாளர்களும், வர்த்தகர்களும் குறிப்பாக மைய மற்றும் வலதுசாரி அரசியல்வாதிகளும் முன் வைத்த விவாதத்தினால் மக்களாதரவில் 18 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
நல்லதொரு இணக்கமான தீர்வு ஏற்பட்டு இரண்டாண்டுகளான பின்பே தேசிய அளவிலான சட்டத்தைக் கொண்டுவர முடியும் என்பதை புகையெதிர்ப்பாளர்கள் நன்கு உணர்ந்திருப்பதை GFS பெர்னின் இயக்குநர் கிளாட் லாங்சாம்ப் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள 26 மாநிலங்களில் 18 மாநிலங்கள் பணியிடங்களில் புகை பிடிப்பதை அனுமதிக்கின்றன. சிறிய காபிக்கடை, மதுபானக்கூடம் போன்றவற்றில் பணியாளர் சேவையும் புகைபிடிப்பவர்களுக்குக் கிடைக்கின்றது. இங்கு இவர்களுக்கென்று தனியாக புகைபிடிப்பதற்கான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ad

ad