புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012


திரும்பிப் போ திரும்பிப் போ சிங்கள இனவெறியன் இராஜபக்சேவே திரும்பிப் போ :
திருமாவளவன் ஆர்ப்பாட்டம் 
மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ள சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைக் கண்டித்தும், 



அழைப்பு விடுத்த பா.ஜ.க., அனுமதியளித்த காங்கிரசு அரசுகளைக் கண்டித்தும் சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் இன்று (21-9-2012) காலை 10 மணியளவில் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

காலை 9 மணி முதலே அப்பகுதியில் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் கூடினர்.  மேலும் ஏராளமானோர் போராட்டத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் ஆங்காங்கே காவல்துறையினர் அவர்களைத் தடுத்து திருப்பியனுப்பிவிட்டனர்.
 10.30 மணியளவில் கட்சியின்  தொல்.திருமாவளவன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தவுடன்,  அவர் தலைமையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக சிறுத்தைகள் அனைவரும் முன்னேறினர்.  
அப்போது காவல்துறை அவர்களைத் தடுத்தது.  உடனே திருமாவளவன் உள்பட அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  

சுமார் 1 மணிநேரம் சாலை மறியல் நீடித்தது.  மற்றொரு புறம் சிறுத்தைகள் சிலர் சிங்களக் கொடியையும் இராஜபக்சே உருவ பொம்மையையும் சுஷ்மா ஸ்வராஜ் உருவ பொம்மையையும் எரித்தனர்.

"திரும்பிப் போ திரும்பிப் போ சிங்கள இனவெறியன் இராஜபக்சேவே திரும்பிப் போ திரும்பிப் போ, கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் அழைப்பு விடுத்த பா.ஜ.கவை, அனுமதியளித்த காங்கிரசை கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம், கைவிடு கைவிடு இலங்கை அரசுடனான உறவைக் கைவிடு" ஆகிய முழக்கங்களை சாலையில் அமர்ந்தபடியே தலைவர் திருமாவளவன் எழுப்ப தொடர்ந்து சிறுத்தைகளும் முழங்கினர்.


பின்னர் மறியலில் ஈடுபட்ட திருமாவளவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளும் கைது செய்யப்பட்டு எம்எம்டிஏ பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முகமது யூசுப், வன்னிஅரசு, இளஞ்சேகுவேரா, பார்வேந்தன், எஸ்.எஸ். பாலாஜி, ஷா நவாஸ், சூ.க.விடுதலைச்செழியன், பாலசிங்கம், கபிலன், ஆ.விடுதலைச்செல்வன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகளுடன் திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ad

ad