புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2012


திடுக்கிட வைக்கும் மர்மம்: படுகொலை செய்யப்பட்ட தேசியத் தலைவரின் தந்தையார்
தமிழீழத் தேசியத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தவில்லையென்றும், கோத்தபாய ராஜபக்சவின் நெறிப்படுத்தலில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார்
என்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலுப்பிள்ளை அவர்களை துப்பாக்கியால் படுகொலை செய்வது சர்வதேச அழுத்தங்களுக்கு வழிவகுப்பதோடு, தம்மை சர்ச்சைகளுக்குள் மாட்டிவிடும் என கருதிய கோத்தபாய அணி, குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் மரணமடையக்கூடிய ஒருவித நச்சு ஊசியை அவருக்கு செலுத்தியதாகவும். அதன், விளைவாகவே, அவர் மரணிக்க நேர்ந்ததாகவும் சிங்களத் தரப்புகளிடம் இருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த படுகொலைத் திட்டமிடலில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், போர்க்குற்றவாளியுமான சரத் பொன்சேகாவிற்கும் தொடர்பிருப்பதாகவும் தெரியவருகிறது.
அதன் அடிப்படையிலேயே, சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம், இவ்வாறான முறையில் கொல்லப்படலாம் என்ற அச்சம் நிலவியதாகவும். அதனால், சரத் பொன்சேகா இரட்டிப்பு விழிப்பு நிலையில் இருந்ததாகவும் அறியப்படுகிறது.
ஆனால், காலம்சென்ற வேலுப்பிள்ளை அவர்களது படுகொலையில் சரத் பொன்சேகாவும் தொடர்புபட்டிருந்தமையால் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தனர்.
ஆனால், அண்மையில் சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமானவரும், புலிகளுக்கு எதிரான சமர்களில் தீவிர பங்காற்றியவருமான இலங்கை இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சமந்த சூரியபண்டார மாரடைப்பால் அவுஸ்திரேலியாவில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சிங்கள அரச பயங்கரவாதத்தின் படுகொலை நடவடிக்கை தொடர்பான தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது.
ஏனெனில், குறிப்பிட்ட காலத்தின் பின்னர், இயற்கையான மரணம் போன்று சம்பவிக்கக் கூடிய வகையில் திட்டமிட்ட முறையில் விசம் ஏற்றப்பட்டதாலேயே சூரியபண்டார மரணமடைந்திருப்பதாக சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, ஒருவரை ஒருவர் படுகொலை செய்யும் அளவையும் தாண்டி, குறிப்பிட்டவர்களுக்கு நெருக்கமானவர்களையும் படுகொலை செய்யும் நிலைக்கு சென்றுள்ளதே சூரியபண்டாரவின் மரணம் எனவும் தெரியவருகிறது.
இதேபோன்றதொரு முறையிலேயே, ரஸ்யா உளவுப் பிரிவில் பணியாற்றிய முன்னால் இளநிலை அதிகாரியான அலெக்ஸ்சான்டர் லிற்வினேகோ, 2006 நவம்பரில் இலண்டனில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பலஸ்தீன முன்னால் அதிபர் யசீர் அரபாத் அவர்களும் இவ்வாறே கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வெளிவந்ததையடுத்து விசேட அவதானம் அவரது மரணம் தொடர்பாக இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad