புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2012


வட மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கங்களாக மாறிப்போன தமிழீழ விடுதலை புலிகள் பெண் போராளிகள் மீதான பாலியல் கொடுமைகள்

வட மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கங்களாக மாறிப்போன தமிழீழ விடுதலை புலிகள் பெண் போராளிகள் மீதான பாலியல் கொடுமைகள்!
தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துவரும் இலங்கை இராணுவ படையினர் தமிழீழ விடுதலை புலிகள் முன்னாள் பெண் போராளிகளை பாலியல் கொடுமைகளில் மூழ்கடுத்து சிங்கள படையினர்கள் மூலம் அவர்களை கர்ப்பிணிகளாக்கும் இழி செயலை புரிந்துவருவதாக மருத்துவ அதிகாரிகளின் கூற்றினையும் நடந்த உண்மைகளை மேற்கோள்காட்டியும் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
இலங்கை இராணுவர்களினால் தமிழீழ விடுதலை புலிகள் பெண் போராளிகள் கர்ப்பிணிகளாக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த எதிர்ப்பார்ப்புக்கு அப்பெண்கள் இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை வதைத்து நினைத்ததை முடித்து வருகின்றனர் இராணுவத்தினர்.
முன்னாள் பெண் போராளிகள் மீதான இன அழிப்பு உள்ளிட்ட கர்ப்பத்தரிப்பை உறுதிபடுத்திய மூத்த மருத்துவர் ஒருவர், இக்கொடுமைகளை எதிர்த்து எத்தகைய தீர்வு எடுப்பதென்றே தெரியவில்லை என கூறியுள்ளார். சாமீபத்திய தினத்தில், எட்டு மாத கர்ப்பிணியாக அவரை நாடி வந்த பெண்ணுக்கு கன்னித்துறவிகளின் பாதுகாப்பை பெற்றுத்தந்ததையன்றி வேறெதையும் தன்னால் செய்ய முடியவில்லையென அவர் கவலைக்கிடம் தெரிவித்துள்ளார். தீவில் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கவோ அல்லது அவர்களுக்கு வெளி இடங்களில் அடைக்களம் கொடுக்கவோ எவ்வித சர்வதேச அமைப்புகளும் இல்லையென அம்மருத்துவர் மேலும் கருத்துரைத்துள்ளார்.
பெண் போராளிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் இரு நிலைகளில் தினிக்கப்படுகின்றன. ஒன்று அவர்கள் இராணுவர்களின் காவல் முகாம்களில் இருக்கும்போது, மற்றொன்று அவர்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டதற்கு பின்னர் என பெண்ணிய சமூக பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் கைப்பற்றிய 2000 முதல் 3000 வரையிலான பெண் போராளிகள் பற்றிய எவ்வித விவரங்களும் இன்னும் தெரியவில்லை. அவர்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்களா அல்லது ஏதேனும் இரகசிய முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனரா என்று உள்ளூர் மற்றும் சர்வதேச பதிவேடுகள் எதும் காணப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை விடுவிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையோடு சரிசம ஈடுகொடுக்கவில்லையென கணக்கெடுப்புகள் சாடுகின்றன. தங்களின் தடுப்பு காவலில் சுமார் 600 பெண்கள் மட்டுமே இருப்பதாக கொழும்பு அறிவித்திருந்தது. மீதப்பெண்கள் என்ன ஆனார்கள் என்று சமூக தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது இவ்வாரிருக்க, முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்போராளிகள் இரண்டாம்கட்ட நிலையில் பாலியல் கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர். விசாரணைகளின் போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு அவர்களை ஆட்படுத்துவதும் மேலும் மேலும் அவர்கள் கொடுமை படுவதும் இலங்கை இராணுவ முகாம்களில் வழக்கமான செயல்களாகவும் இராணுவர்களின் பொழுது போக்காகவுமே மாறிவிட்ட அவலம் நிலவிவருகிறது. வவுனியா, வன்னி மற்றும் யாழ்பாணம் உள்ளிட்ட இலங்கை இராணுவ தளங்களிலும் புலனாய்வுத்துறை முகாம்களிலும் இவை பரவலாக நடந்தேரி வருவதாக சமூக ஆர்வலர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்னிலை குறித்து கருத்துரைத்த செய்தியாளர் ஒருவர், இறுதிக்கட்ட போருக்குப் பின்னர் பெண் புலிகளின் போராளிகள்மீது பாலியல் வன்முறைகள் புரிவதற்கு ஏதுவாய் இளம் சிங்கள இராணுவர்களிடம் ஆபாச ஆவணங்களையும் படங்களையும் வழங்கி அவர்களை பாலியல் இச்சைக்கு தூண்டியுள்ளது என்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் போராளிகள் ஒருசிலர் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஊடகங்களிடம் மனம்திறந்துள்ளனர். அவர்களுக்கு இழக்கப்பட்ட கொடுமைகள் ஒன்றா இரண்டா.
ஆறுமாத கர்ப்பிணியாக தடுப்பு முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் ஒருவர் வாழவே பிடிக்காமல் கருக்களைக்க முயன்றதாக அப்பெண்ணின் தாயார் புலம்பியுள்ளார்.
மேலும், பல்லவி என அழைக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கிழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி சொல்லுகையில் விசாரணை என்ற பெயரில் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் உயர்மட்ட அதிகாரிகளால்வரை கற்பழிக்கப்பட்டதாகவும் தன் கதறலில் அவர்கள் இன்பம் கண்டதாகவும் கொந்தளித்துள்ளார்.
மேலும் பல தமிழ் பெண்கள் கொடுமைகள் தாங்க முடியாமல் சிங்களர்களின் குழந்தைகளை தங்களின் கற்பத்தில் சுமக்கும் அவலம் தாங்க முடியாமல் உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளனர். சில பெண்கள் துண்டு கத்திகளை விழுங்கி தற்கொலை செய்ய முயற்சித்திருப்பதாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கருக்களைக்க வசதியற்ற பெண்கள் தங்களை தூக்கிலிட்டு உயிர் மாய்த்துக்கொள்ளவும் தயங்கவில்லை எனவும் அம்மருத்துவர் மேலும் கூறியுள்ளார்.
இன்னிலையில், சமீபத்தில் பொலிகண்டியில் தற்கொலை செய்துக்கொண்ட சுபோதினி சிவலிங்கம்,32 தன் வாழ்நாளின் 15 வருட காலத்தை விடுதலை போராட்டங்களிலேயே அர்பணித்துள்ளார். 1999-ஆம் ஆண்டு தாக்குதல்களின்போது காயமுற்று பக்கவாதமுற்ற அவர் வன்னி போரின்போது தமிழீழ விடுதலை புலிகளின் மருத்துவ முகாம்களில் சேவையாற்றிவந்துள்ளார். வறுமையின் காரணமாகத்தான் சுபோதினி தற்கொலை செய்துக்கொண்டார் என செய்திகள் வந்திருந்தன. ஆனால், விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து பாலியல் கொடுமைகளுக்கும் இராணுவர்களிடமிருந்து பெறப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களினால்தான் இறந்துள்ளார் என உண்மை தகவல்கள் பின்னர் கிட்டின.
இலங்கை இராணுவர்களின் பாலியல் கொடுமைகளை அனுபவித்து அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண் போராளிகள் அவையாவையும் மறந்து புதிதாய் மீண்டும் தங்களின் வாழ்வை வாழ நினைக்கின்றனர். ஆயினும், இராணுவம் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை ஒரு வழக்கமாவே இன்னமும் கொண்டுள்ளது. இப்படியிருக்க எப்படி எங்களுக்கான வாழ்வை நாங்கள் வாழமுடியும் என புலிகளின் பெண் போராளி ஒருவர் முழங்கியுள்ளார்.
வெற்றிக்குமரன் தமிழரசி

ad

ad