புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2012


கிழக்கில் தலையாட்டி பொம்மையாக மாறுவதா? கூட்டமைப்புடன் இணைவதா? முஸ்லீம் காங்கிரஸ் நாளை முடிவு!
கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஐ. ம.சு. கூட்டமைப்புக்கு கொடுத்துவிட்டு, தலையாட்டி பொம்மையாக முஸ்லீம் காங்கிரஸ் இருக்கப் போகின்றதா? அல்லது காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபையை அமைப்பதற்கான உரிமையை த. தே. கூட்டமைப்புடன் இணைந்து
கோரப் போகின்றதா? என்ற கேள்வி அனைத்து சிறுபான்மையின மக்களிடமும் எழுந்துள்ளது.
தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் அறுபது ஆண்டுகால உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து முஸ்லீம்களினது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான மீண்டுமொரு அரிய சந்தர்ப்பம் முஸ்லீம் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கொடுத்துவிட்டு கிழக்கின் தலையாட்டி பொம்மையாக முஸ்லீம் காங்கிரஸ் இருக்கப்போகின்றதா? அல்லது காணி, பொலீஸ் அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபையை அமைப்பதற்கான உரிமையை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கோரப் போகின்றதா? என்ற கேள்வியே இன்று கிழக்கு மாகாண தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் கேள்வியாகவுள்ளது.
காலம் இவ்வாறான சந்தர்ப்பங்களை என்றாவது ஒருமுறைதான் வழங்கும் அந்த சந்தர்ப்பங்களை வரலாறாக மாற்றுவதும் அல்லது வரலாற்று தவறை நிகழ்த்துவதும் குறிப்பிட்ட இனங்களுக்கு கிடைத்துள்ள தீர்க்கதரிசனம் நிறைந்த தலைமைகளைப் பொறுத்தே அமையும்.
இவ்வாறான வரலாற்று காலகட்டத்தில் இன்று முஸ்லீம் காங்கிரஸ் இருந்து கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட இரண்டு தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இன்று முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லீம்களாக இருந்தாலும் சரி அல்லது தமிழர்களாக இருந்தாலும் சரி இரண்டு இனங்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய முடிவினை நாளைய தினம் முஸ்லீம் காங்கிரஸ் எடுக்குமென பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
குறிப்பாக முஸ்லீம் காங்கிரசுக்கு வாக்களித்த மக்கள், முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைவதை விரும்பவில்லை அதேபோன்று முஸ்லீம் காங்கிரசின் உயர்பீடத்தில் உள்ள பலரும் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர்.
இந்நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் சலுகைகளுக்கு அடிபணியாமல் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான கருவியாக இந்த மாகாணசபையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்கின்றனர் கிழக்கு மாகாண மக்கள்.

ad

ad