புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2012

தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பதற்கு இணங்க ஸ்ரீலங்கா சதந்திரக் கூட்டமைப்பில் கிழக்கு மாகாண சபையின் வேட்பாளர்களாக நிற்கும் சிலர் (எண்ணிக்கை குறிப்பிட விரும்பவில்லை) அவர்களே தமிழ்த் தேசியத்துக்கு வாக்களிக்க தீர்மானத்து விட்டனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சி சந்திரகாந்தன் அவர்கள் ஒரு உறுப்பினராக வரவேண்டும் என்று எண்ணுங்கள் அப்புறம் ஆப்பு யார் யாருக்கு வைக்கிறார்கள் என்று பாருங்கள்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல்கள் நடைபெறும் வரை இணைந்த மாகாணத்தை நிர்வகிக்கவென இடைக்கால நிர்வாக சபையொன்றை உருவாக்க வேண்டுமென இந்திய - இலங்கை அரசுகள் தீர்மானித்ததின் பேரில் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் ஐக்கிய விடுதலைக்

கூட்டணி, இலங்கை அரசு மற்றும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி பன்னிரண்டு பேர் கொண்ட இடைக்கால நிர்வாகசபையொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டது. இடைக்கால நிர்வாகசபை அமைப்பு பற்றி இலங்கை அரசும் இந்திய அரசும் தமிழர் தரப்புடன், குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தினர்.இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இந்திய அரசு நடாத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஜந்து விடயங்களை அமுல் செய்ய வேண்டுமெனக் கோரி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபன் அகிம்சை வழியில் 15.09.1987ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில் ஆரம்பித்தார்.எவ்வாறாயினும், தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தெளிவாக இருந்த திலீபன் 26.09.1987ம் திகதி அதற்று ஆகுதியாக தியாகியானான். அன்றைய தினம் இந்திய தூதுவர் ஜே.என்.டிக்கிற் காலை பலாலியில் அமைந்திருந்த இந்திய இராணுவத்தளத்தில் இந்திய அதிகாரிகள் சகிதம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மற்றும் அரசியல்துறை சார்ந்த முக்கியஸ்தர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் நிலைமாற்ற ஏற்பாடாக (Transitional Arrangement) பெங்களூர் முன் மொழிவுகளின் அடிப்படையில் பன்னிரண்டு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக அமைப்பு ஒன்றை இலங்கை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் ஜே.என்.டிக்சிற்றிடம் கையளிக்கப்பட்டது.அவை
1. சீ.வீ.கே.சிவஞானம் (பிரதம நிர்வாகி) - யாழ்ப்பாணம்
2. மாத்தயாசிறி - யாழ்ப்பாணம்
3. யோகி - யாழ்ப்பாணம்
4. ரூபன் - திருகோணமலை
5. காசி ஆனந்தன் - மட்டக்களப்பு
6. றொமேஷ - மட்டக்களப்பு
7. செய்யது மொகமட் - கல்முனை

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில்..

இரா. சம்பந்தன் - திருகோணமலை
சூசைநாதன் - மன்னர்

அரசாங்கத்தின் சார்பில்

சிவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு.லயனல் பெர்னாண்டோ

திரு.திஸ்ஸ ஜயக்கொடி (முன்னாள் உதவித்தூதுவர்) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்

மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அறிவித்த காசி ஆனந்தன் மற்றும் றொமேஷ; ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டு, தேர்வுப் பெயர்களாக வழங்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் மற்றும் ரவி ஆகியோரது பெயர்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. இதனால் மட்டக்களப்புக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகவும் யாழ்ப்பாணத்திலிருந்து ஐவர் நியமனம் பெறவும் பிரகடனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதேசவாத பழியை விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது சுமத்தும் ஒரு இது திட்டமிட்ட சதி.தலைமை நிர்வாகி பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்ட நமசிவாயம் பத்மநாதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை பிரதம நிர்வாகியாக நியமிப்பதன் மூலம் சதியை முறியடிக்க முயற்சிக்கப் பட்டது (திரு.வே.பிரபாகரனின் ஒப்புதலுடன்) அதற்க்கு அணியமாக 30.09.1987ம் திகதி பத்திரிகையில் தனிப்பட்ட காரணங்களால், இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக திரு.சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் அறிக்கை வெளியாகியது. பத்மநாதனை பிரதம நிர்வாகியாக நியமிக்க ஜனாதிபதி மறுத்ததால் இடைக்கால நிர்வா சபை என்ற கட்டமைப்பு செயற்பட முடியாது போயிற்று. விடுதலைப் புலிகளால் வழங்கிய பெயர்ப்பட்டியலில் இருந்த காசி ஆனந்தன் மற்றும் றொமேஷ; ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டமை இந்தியா அறிந்தே இருந்தது.உண்மையில் மட்டக்களப்பு பிரதிநிதிகளின் பெயர்கள் நீக்கப்பட்டமை பற்றி ஜனாதிபதியுடன் பேசி, அப்பெயர்களை ஏற்கச் செய்திருந்தால், எவ்வித பிரச்சனைகளும் எழுந்திராது. ஆனால் அப்படிச் செய்யாமல் இடைக்கால நிர்வாக சபை நியமன ஏற்பாடு தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையால் தோல்வி கண்டதாக பொய்யான பரப்புரையை இன்று வரை ஸ்ரீலங்கா, இந்திய அரசுக மேற்கொள்கின்றன.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதனின் பெயர் தமது பிரேரணைகளில் ஏற்கெனவே இருப்பதால் அவர் பிரதம நிர்வாகியாக நியமிக்கப்படல் அரசியல் ரீதியாக கட்டாயமானது என்ற நிலைப்பாடு தெளிவாக இருந்தது. மேலும் கிழக்கு மாகாணத்துக்கு குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு அமைப்பை ஏற்கத் தயாராகவும் இருக்கவில்லை. இதுதான் நிதர்சனமான உண்மை. அதனாலேயே பத்மநாதனை ஜனாதிபதி நிராகரித்தபோது வல்வெட்டித் துறையைச் சேர்ந்த சிவஞானசுந்தரத்தின் நியமனத்தை கோரவில்லை என்பதுடன், சாதாரண அங்கத்துவம் நீக்கப்பட்ட நிலையில் கிழக்குக்கு தலைமை நிர்வாகி பதவி வழங்குவதில் பிடிவாதமாகவிருந்தனர். இதன்மூலம் விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் தெளிவாகிறது. தமிழர் ஜக்கிய விடுதலைக் கூட்டணியும் தமது இரண்டு பிரதிநிதிகளில் ஒருவராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரா.சம்பந்தன் அவர்களை நியமித்தார்.எனினும் கடந்த இருபத்தைந்து வருட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழர் தரப்பு தமக்கு கிடைத்த அரிய வாய்ப்பினை தவற விட்டதாகவே கூறப்பட்டு வருகிறது இது முற்று முழுதான பொய்யாகும்.

பிரதேச வாதம் பேசும் ஈனர்களே !

எல்லோரும் நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டிய விடயம், தமிழ் தேசிய இனத்தின் தன்னாட்சி அதிகார அடைதல் நிலையின் முக்கிய திருப்பு முனையை (இடைக்கால நிர்வாகசபை) நாம் இழந்தது. மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதித்துவத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் முற்றாக நீக்கியமையே.தற்போது கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையைச் சேர்ந்த திரு இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் தலைவராக திகழ்கின்றார்.ஸ்ரீலங்கா அரசு இந்த அரசுடன் ஒட்டிக் கொண்டு ஓட்டுணியாக இருப்பவர்கள் தமிழ்த் தேசியத்தை விமர்சிக்க அருகதையற்றவர்கள்

ad

ad