புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2012


யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 150 பேர் கைது
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களில்
ஆஜர்ப்படுத்தப்பட்டு தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீ குகனேசன் தெரிவித்தார்.
 

யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ். மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகனேசன் தலைமையில் நேற்று சனிக்கிழமை பகல் நடைபெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகனேசன்,

யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் இடம் பெற்ற தேடுதல் சோதனை நடவடிக்கைகளின்போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமற்ற முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 03 பேரும் வீதிகளில் குப்பைகளைக் கொட்டி சுற்றுச் சூழுல் பாதிப்படையும் வகையில் நடந்துகொண்ட 03 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜாப்படுத்தப்பட்டு உரிய தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை பொலி;ஸ் அத்தியட்சர் பிரிவில் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37 பேரும் சட்டவிரோதமான முறையில் சாராயம் விற்ற 06 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 04 பேரும் மது போதையில் வாகனம் செலுத்திய 07 பேரும் வீதிகளில் குப்பைகளைக் கொட்டி சுற்றுச் சூழுல் பாதிப்படையச் செய்த 04 பேரும் கைது செய்யப்பட்டு 

ad

ad