வெள்ளி, செப்டம்பர் 07, 2012


அரசாங்கமே தேசத்துரோக செயல்களில் ஈடுபடுகின்றது – விக்ரமபாகு கருணாரட்ன
அரசாங்கமே தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டு வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். 
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள பலர் தேசத்துரோகிகள். வறிய மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை சுரண்டிக் கொள்ளையிட்டு நன்மைகளை அடைவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களை வகிப்போரே தேசத்துரோகிகளாகும்.
டெசோ மாநாட்டில் ஈழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை, 13ம் திருத்தச் சட்ட மூலம் தொடர்பிலேயே வலியுறுத்தப்பட்டது.
தேசத்திற்கு விரோதமாக செயற்படவில்லை, எவரும் என் மீது தாக்குதல் நடத்தவுமில்லை.
ஆளும் கட்சியின் ஒரு சிலர் இவ்வாறான போலி குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.
டெசோ மாநாட்டில் எனது உரைக்கு இடையூறு ஏற்படுத்தப்படவில்லை, அவ்வாறு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக நாட்டின் அரச ஊடகங்களே தகவல் வெளியிட்டு வருகின்றன.
பயங்கரவாதத்தின் மூலம் புரட்சி செய்ய முடியும் என்பது எனது நிலைப்பாடல்ல, எனினும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தனர்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரின் நடவடிக்கைகளினால் எதிர்காலத்தில் பயங்கரவாதம் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
வடக்கு மக்களுக்கு 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளிலும் இதுவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், இதுவரையில் பரிந்துரைகளை அமுல்படுது;த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.