புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012


பிரிட்டனில் புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் மீது கட்டுநாயக்கவில் விசாரணை
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இலங்கையை வந்தடைந்துள்ள  25 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களை பதிவுசெய்யவுள்ளதாக விமானநிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு 25 பேர் பிரித்தானியாவால் திருப்பியனுப்பப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டு தாயகம் திரும்பியவர்களுள் 4 பெண்களும் 21 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 13 தமிழர்களும் 8 முஸ்லிம்களும் 4 சிங்களவர்களும் உள்ளனர். 
இவர்களுடன் 50 பிரிட்டன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வந்துள்ளனர். 
புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் 60 பேராகினும், 35 பேர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் பிரித்தானியாவில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட விமானத்தில் பாதுகாப்பின் மத்தியில் இன்று காலை நாடு திரும்பிய 25 பேரும் தற்போது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் சுகாதார நிலைமைகள் குறித்தும், வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், அவர்களுக்கு எதிர்காலத்தில் இங்கு இன்னல்கள் ஏற்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ad

ad