புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2012


சீன சைக்கிள்கள் ஏற்றுமதி! ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் ஆட்சேபனை?
இலங்கையை மையமாகக்கொண்டு சீனாவின் சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேபனை, பிரசல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேனாட் சேவேஜ் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்படும் சைக்கிள்கள் கொழும்பு, இந்தோனேசியா, மலேசியா மற்றும் டியூனிசியா ஆகிய நாடுகளை மையமாகக்கொண்டு 27 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறித்து ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வரிவிதிப்பை தவிர்த்துக்கொள்வதற்காகவே சீனா இவ்வாறு செயற்படுவதாக ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
நடைபெறுகின்ற விசாரணைகளின் மூலம் இலங்கை நியாயமாக நடந்துள்ளதா? அல்லது ஒழுங்குகளை மீறியுள்ளதா என்பது தெரியவரும் என்று செவேஜ் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலமே சென்றுள்ளது. எனவே சீனாவின் இந்த வர்த்தகம் மூலம் ஏற்பட்ட நட்டத்தை தந்போதைக்கு கணக்கிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பதுக்கலுக்கு எதிரான வரியாக செலுத்தவேண்டிய 48.5 வீதத்தை தவிர்த்து, ஐரோப்பியாவில் குறைந்த விலையில் தமது சைக்கிள்களை விற்பனை செய்வதற்காகவே சீனா, இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு ஊடாக சைக்கிள்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக ஐரோப்பிய சைக்கிள் தயாரிப்பாளர் சங்கமும் குற்றம் சுமத்தியுள்ளது.

ad

ad