புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2012


கனேடிய தமிழீழ சுற்றுக்கிண்ணம் – உதைபந்தாட்ட போட்டி.(படங்கள்)

 
செப்டம்பர்   மாதம் முதலாம் திகதி, (01 – 09 – 2012 ) L’Amoreaux  விளையாட்டு மைதானத்தில்  வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8:00  மணிக்கு தமிழீழ மற்றும் கனேடிய தேசியக்கொடிகள் ஏற்றப்பட, அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வு  மாலை பரிசளிப்பு விழாவுடன் முடிவடைந்தது. அதில் பங்குபற்றிய இளையோர்கள் தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி
இருந்தார்கள்.
சிறப்பு பரிசாக தமிழீழத்தின் சின்னங்களான வாகை, சிறுத்தை, செண்பகம் மற்றும்  கார்த்திகைப்பூ செதுக்கப்பட்ட  கேடயம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பசரிசாக வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற பின்வரும் விளையாட்டு குழுக்களுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.
6 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் சீலன் ரேஞ்சர்ஸ் அணி முதலாவது இடத்தையும் தீபன் அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுகொண்டனர்.
8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் தீபன் அணி முதலாவது இடத்தையும் சீலன் ரேஞ்சர்ஸ் அணி இரண்டாவது இடத்தையும்  பெற்றுகொண்டனர்.
9 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் சீலன் ரேஞ்சர்ஸ் அணி முதலாவது இடத்தையும் தீபன் அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுகொண்டனர்.
10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் சீத்தாஸ் அணி முதலாவது இடத்தையும் சீலன் ரேஞ்சர்ஸ் B அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுகொண்டனர்.
12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் சீலன் ரேஞ்சர்ஸ் A அணி முதலாவது இடத்தையும் சீலன் சீலன் ரேஞ்சர்ஸ் B அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுகொண்டனர்.
14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில்  தீபன் A அணி  முதலாவது இடத்தையும்,  சீலன் ரேஞ்சர்ஸ் A அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுகொண்டனர். இப்பிரிவில்  சிறந்த காப்பாளருக்கான வாகை விருதை தீபன் அணியை சான்ற தமிழரசன் சிவபாலனும், சிறந்த சகல துறை விளையாட்டு வீரருக்கான சிறுத்தை விருதை சீலன் ரேஞ்சர்ஸ் அணியை சேர்ந்த ஜதுஷன் புஷ்பராஜாவும், சிறந்த பாதுகாப்பு வீரருக்கான செண்பகம் விருதை சீலன் ரேஞ்சர்ஸ் அணியை சான்ற துஷந்த்  கிரிதரகுகனும், மற்றும் போட்டி நேர்மைப் பண்பு கொண்ட விளையாட்டு வீரருக்கான கார்த்திகைப்பூ விருதை தீபன் அணியை சான்ற தனுஜன் ஜெய்திலகனும் கைப்பெற்றினர். இப்பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக தீபன் அணியை சான்ற அபினேஷ் ரவிகந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் சீலன் ரேஞ்சர்ஸ் அணி முதலாவது இடத்தையும், ஜார்விஸ் அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுகொண்டனர். இப்பிரிவில்  சிறந்த காப்பாளருக்கான வாகை விருதை சீலன் ரேஞ்சர்ஸ் அணியை சான்ற பிரஷாந்தும்,  சிறந்த சகல துறை விளையாட்டு வீரருக்கான சிறுத்தை விருதை ஜார்விஸ் அணியை சான்ற விதுனும், சிறந்த பாதுகாப்பு வீரருக்கான செண்பகம் விருதை ஜார்விஸ் அணியை சான்ற அன்ஸ்லியும், போட்டி நேர்மைப் பண்பு கொண்ட விளையாட்டு வீரருக்கான கார்த்திகைப்பூ விருதை சீலன் ரேஞ்சர்ஸ் அணியை சான்ற நரேனும் கைப்பெற்றினர். இப்பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக சீலன் ரேஞ்சர்ஸ் அணியை சான்ற அபினேஷ் டிலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உயர்தர ஆண்களுக்கான போட்டிகளில் E.N.A அணி முதலாவது இடத்தையும், ஜார்விஸ் அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுகொண்டனர். இப்பிரிவில் சிறந்த காப்பாளருக்கான வாகை விருதை E.N.A அணியை சான்ற விவேக்கும், சிறந்த சகல துறை விளையாட்டு வீரருக்கான சிறுத்தை விருதை ஜார்விஸ் அணியை சான்ற பிரஷாந்தும், சிறந்த பாதுகாப்பு வீரருக்கான செண்பகம் விருதை ஜார்விஸ் அணியை சான்ற அரனும், போட்டி நேர்மைப் பண்பு கொண்ட விளையாட்டு வீரருக்கான கார்த்திகைப்பூ விருதை E.N.A அணியை சான்ற டினேஷ் தர்மாவும்  கைப்பெற்றினர். இப்பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக E.N.A அணியை சான்ற ஷரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிகழ்வு சிறப்பாக  நடைபெறுவதற்கு உதவிய பயிற்சிவிற்பாளர்கள், நடுவர்கள் , விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள்,  தொண்டர்கள் மற்றும் இந்நிகழ்வுக்கு ஊடக அனுசரணை வழங்கியவர்களுக்கும், கனடியத் தமிழ்  இளையோர் ஒன்றியம் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றிபெற்ற அணைத்து விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு குழுக்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.07092012-00907092012-01007092012-01107092012-01207092012-01307092012-01407092012-01507092012-016

ad

ad