புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2012


விஜய் நடித்த 'காவலன்' படத்தின் வெளியீட்டிற்கு தான் பிரச்னை எழுந்தது. ஆனால் 'துப்பாக்கி' படத்திற்கு தலைப்பே பெரும் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது. 
'துப்பாக்கி' தலைப்பு பிரச்னையை ஒன்பதாவது முறையாக ஒத்திவைத்து இருக்கிறது சென்னை நீதிமன்றம். மும்பையில் அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறது 'துப்பாக்கி' படக்குழு.



அக்டோபர் 3ம் தேதி இப்படத்தின் வழக்கு நீதிமன்றத்திற்கு வரவிருக்கிறது. அன்று இப்படத்தின் தலைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்தி படத்தினை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அக்டோபர் 3ம் தேதி பிரச்னை முடியவில்லை எனில் படத்திற்கு 'சரவெடி' அல்லது 'மும்பை தமிழன்' என்று பெயரிடலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் முழுக்க மும்பையில் நடப்பதால் 'மும்பை தமிழன்' என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவில் சிலர் நினைக்கிறார்களாம். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் 'துப்பாக்கி' தான் படத்திற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு, அக்டோபர் 3ம் தேதி வரை பார்க்கலாம், மறுபடியும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டால், வேறு தலைப்பு பற்றி யோசிக்கலாம் என்று கூறுகிறாராம்.

அக்டோபர் 3ம் தேதி துப்பாக்கி, சரவெடி, மும்பை தமிழன் எது தலைப்பு என்று தெரியவரும்.


ad

ad