புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2012


கிழக்கில் தமிழ் கூட்டமைப்பின் வெற்றியானது எமது போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்!
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பெறுகின்ற வெற்றியானது எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையப் போகின்றது என யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட். ஆரையம்பதியில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறிதரன் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
எமது விடுதலைப் போராட்டம் எத்தனையோ படிமுறைகளைக் கடந்து இன்னும் தொடர்கிறது. அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டங்களைக் கடந்து தற்போது இராஜதந்திரப் போராட்டமாக உள்ளது.
இலங்கை அரசு தனது இராஜதந்தர செயற்பாட்டில் வெற்றியடைவதற்கே இந்தத் தேர்தலை எம்மீது திணித்துள்ளது.
எனவே தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இந்தத் தேர்தலும் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு அங்கமாக உள்ளதுடன் இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெறுகின்ற வெற்றியானது எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவும் அமையப் போகின்றது.
எனவே நடைபெற இருக்கின்ற தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து இலங்கை அரசு எம்மீது தொடுத்துள்ள இந்த இராஜதந்திரப் போராட்டத்தில் வெற்றியடைந்து எமது இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad