புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012


ஜனாதிபதியின் ஆட்சியை கவிழ்க்க இரகசிய சூழ்ச்சித் திட்டம்: புலனாய்வுப் பிரிவு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்க்க இரகசிய சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்தோனேசியாவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் சுகார்ட்டோவை பதவி விலக்கியதனைப் போன்று, ஜனாதிபதி மஹிந்தவையும் பதவி விலக்க முயற்சிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த ஆட்சியை கவிழ்க்கும் நோக்கிலேயே பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தேசிய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்க கோரிக்கைகளை விடவும் ஆட்சி கவிழ்ப்பதனை முன்னிலைப் படுத்தி போராட்டம் நடத்தப்பட வேண்டுமென பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் நிறைவேற்றுக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைப் போன்றே இலங்கையிலும் போராட்டம் நடத்தி ஆளும் கட்சியை பதவி கவிழ்க்க முயற்சிக்கப்பட்டு வருகின்றது.
தொழிற்சங்கப் போராட்டங்களை அரச எதிர்ப்பு போராட்டங்களாக வெளிக்காட்டிக் கொள்ளும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சில பல்கலைக்கழக பேராசிரியர்களின் கோரிக்கைகளானது உலகின் எந்தவொரு நாட்டிலும் விடுக்கப்படாத கோரிக்கைகளாகும் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ad

ad