புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2012

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், என் ஆடைகளை துறக்க தயார் என்று பிரபல பொப் பாடகி மடோனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டனில் கடந்த 24ஆம் திகதி இரவு பொப் பாடகி மடோனாவின் இசை நிகழ்ச்சி
நடந்தது.
இதில் ரசிகர்கள் மத்தியில் மடோனா பேசுகையில், வெள்ளை மாளிகையில் கறுப்பு முஸ்லிம் போல ஜனாதிபதி பராக் ஒபாமா இருக்கிறார்.
தேர்தலில் அவர் 2வது முறையாக வெற்றி பெற்றால், எல்லாவற்றையும் துறக்க நான் தயார். அவர் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.
அதற்காக அவரை ஆதரித்து வாக்களியுங்கள். நல்லதோ, கெட்டதோ அவருக்கு வாக்களியுங்கள். அவர் நாட்டுக்கு நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் திடீரென தனது மேலாடையை கழற்றினார். அவரது முதுகில் ஒபாமா என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் கறுப்பு முஸ்லிம் என்று ஒபாமா குறித்து ஏளனமாக விமர்சித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்த மடோனா, ஒபாமா முஸ்லிம் அல்ல, கிறிஸ்டியன் என்பது எனக்கு தெரியும்.
நான் சொல்ல வந்தது என்னவென்றால், நல்ல மனிதர் எப்போதும் நல்ல மனிதராகவே இருப்பார். அவர் எந்த கடவுளை வழிபடுகிறார் என்பது பெரிய விஷயம் அல்ல. அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது பற்றி கவலையில்லை என்றார்.

ad

ad