புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


எங்கள் போராட்டம் அறவழியில் தொடரும் : உதயகுமார்
கூடன்குளத்தில் நேற்றைய தினம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடந்த வாக்குவாதத்திற்கு பின்பு, காவல்துறையினர் அந்த மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் களைத்தனர்.



இதனிடையே உதயகுமார், ஜேசுராஜன், புஸ்பராயன், முகிலன் ஆகியோரை மக்கள் படகில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.  அதன்பின்பு அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் நேற்று முதல் 48 மணி நேர உண்ணாவிரதம் தொடங்கினர்.

இன்று மதியம் 4 மணி அளவில் உதயகுமாரோடு அவரது சகாக்களும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர்.  அவர்களிடம் மக்கள் நீங்கள் காவல்துறையினரிடம் கைதாகக்கூடாது என்று கண்ணீர் மல்க, அவர்களிடம் கூறினார்கள்.  அவர்களை சமாதனப்படுத்திய உதயகுமார், பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, எங்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள். 

நாங்கள் வன்முறையை விரும்புவபர்கள் அல்ல.  397 நாட்கள் வரை நாங்கள் அறவழியில்தான் போராடுகிறோம்.   நேற்றைய தாக்குதலுக்கு காவல்துறையே பொறுப்பு.    நான் குற்றவாளியல்ல.   இந்த மக்கள் மீது தடியடி செய்யக்கூடாது.   அவர்களை துன்புறுத்தக்கூடாது.   அவர்கள கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்களே முன்வந்து கைதாகிறோம்.
குழந்தைகளையும் பெண்களையும் நாங்கள் கேடயமாக பயன்படுத்தவில்லை.    அவர்களும் இந்நாட்டு குடிமக்கள்.   பாதிப்பு என்றால் அவர்களுக்கும்தான் பொருந்தும்.  மேலும், காந்தீய வழியில் தர்ம நியாய அறவழியில் போராடினால் நிச்சயம் வெற்றி கிட்டும். 

அந்தப்பாதையில்தான் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம்.   மக்களின் ஒன்றுபட்ட அறவழி போராட்டத்தால் ஆசிரியா நாட்டில் தொடங்கப்படவிருந்த அணு மின் நிலையம் மூடப்பட்டது.  அதே போன்று மக்களின் போராட்டத்தால் உலக நாடுகளில் பல்வேறு அணு உலைகளூம் மூடப்பட்ட முன் உதாரணம் உள்ளது’’ என்றார்.

இதையடுத்து தானே முன்வந்து உதயகுமார் கைதாவதாக கருதப்படுகிறது.

ad

ad