புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012


ழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை அரசாங்க பிரதிநிதிகளுக்கும் முஸ்விம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்குமிடையில் நடந்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, சுசில் பிறேம் ஜயந்த, டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்சன யாப்பா, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத் செயலாளர் ஹசன் அலி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சராக திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்படவுள்ளார். முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் ஏ மஜீத்தும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் நியமிக்கும் ஒருவரும் முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளனர்.
கிழக்கு மாகாண அமைச்சுக்கள் இரண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் மற்றைய இரு அமைச்சுகளில் ஒன்று முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும், விமலவீர திஸாநாயக்கவுக்கும் வழங்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பதவி அமிர் அலிக்கு வழங்கப்பட உள்ளது. பிரதி தவிசாளர் பதவி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லீம் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் இன்று கைச்சாத்திடப்பட உள்ளது. முஸ்லீம் காங்கிரஷ் சார்பில் ஹசன் அலியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சுசில் பிறேம் ஜயந்தவும் கைச்சாத்திட உள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மேலதிக மாவட்டமாக அங்கீகரிப்பது, மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லீம்களுக்கு தனியான மாவட்ட நிர்வாக அலகு ஒன்று உருவாக்குவது போன்ற விடயங்கள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட உள்ளன.
நாளை சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இந்தியாவுக்கு பயணமாவதற்கு முதல் இதனை அவர் உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ad

ad