புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2012




கொல்கத்தாவில்  
அரசியல்வாதி கண்முன் 
நடிகை ஆடைகளை அவிழ்த்து பலாத்கார முயற்சி


சந்தர்நாகூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல நடிகையும், மாடல் அழகியுமான அரிதி பட்டாச்சார்யா வசித்து வரு கிறார். இவர் 2002ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா
போட்டியில் கலந்துகொண்டவராவார். மேலும் பல டி.வி. நிகழ்ச்சிகள், நாடகங்களிலும் நடித்துள்ளார்.

அரிதியுடன் அவரது தாய் ஜோதியும் வசித்து வந்தார். அரிதியின் படுக்கை அருகே உள்ள மற்றொரு வீட்டில் அந்த அப்பார்ட்மென்ட் உரிமையாளர்கள் சுமித், ஆசிஸ் முகர்ஜி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வருடங்களாக இவர்கள் நடிகை அரிதிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இரவு நேரங்களில் குடித்து விட்டு வந்து அரிதி முன் தகாத வார்த்தைகளால் பேசி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன் அரிதி அப்பார்ட்மென்ட் உரிமையாளர்களை கண்டித்தார். அப்போது அவர்கள் இனிமேல் இதுபோன்று நடக்காது என உறுதிகொடுத்துள்ளனர்.
ஆனால் அரிதிக்கு தினமும் இடையூறு செய்து வந்துள்ளனர். கடந்த 20ந்தேதி நள்ளிரவில் சுமித்தின் கார் டிரைவர் நிஷாத் என்பவர் குடிபோதையில் அரிதி வீட்டு முன் ரகளை செய்தார். ஆபாசமான வார்த்தைகளால் அவர் பேசியபடி திடீரென ஒரு சிலருடன் கும்பலாக அரிதி வீட்டிற்குள் புகுந்தார்.


அரிதி மீது பாய்ந்த அவர், கம்பால் தாக்கினார். ரத்தம் கொட்டிய வலியால் துடித்த அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.

மேலாடையை கழற்றி எரிந்து வெறித்தனமாக நடந்து கொண்டார். இதை பார்த்தும் அதிர்ச்சியடைந்த அவரது தாய் ஜோதி, வெறிபிடித்த கும்பலிடம் இருந்த மகளை காப்பாற்ற முயன்றார். அவரையும் அந்த கும்பல் தாக்கியது.

 இந்த கும்பலில் அந்த பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இருந்துள்ளார். அவர் இந்த செயல்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். ஒருவழியாக அரிதி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தார்.

இதுதொடர்பாக அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய சென்றார். ஆனால் போலீசாரோ புகாரை உடனடியாக வாங்க மறுத்துவிட்டனர். அரசியல் வாதி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இருவரும் சமாதானமாக பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என பஞ்சாயத்து பேசினர். ஆனால் அரிதி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. 

இதையடுத்து அரிதி தரப்பினர் உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதுவும் சாதாரண வழக்கு பதிவு செய்து விட்டு ஒரு சில மணி நேரத்திலேயே விடுவித்துவிட்டனர். 

இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வெளியே வந்த கும்பல் நடிகை அரிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. புகாரா கொடுக்கிறாய்? உன் மீது ஆசிட் ஊற்றுகிறோம் என மிரட்டியுள்ளனர்.
இது குறித்து நடிகை அரிதி, அப்பார்ட்மெண்ட் ஓனர்களும் அவருடன் இருப்பவர்க ளும் ஒவ் வொரு நாள் இரவிலும் எனக்கு தொல்லை கள் கொடுத் னர். எனக்கு பாது காப்பு இல்லாத நிலையிலே யே இருந்தனர். கடந்த 20ந்தேதி சுமித்தின் கார் டிரைவர் நிஷாத் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டுக்குள் புகுந்து என்னை கம்பால் தாக்கினார்.

நான் அணிந்திருந்த டீஷர்ட்டை கழற்றி தவறாக நடக்க முயன்றார். அப்போது சுமித், முகர்ஜி மற்றும் அரசியல் பிரமுகர் ஒரு வரும் இருந்தனர். அவர்கள் நிஷாத்தின் செயலை தடுக்கவே இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்ட பிறகு தான் வழக்கே பதிவு செய்தனர் என்று கூறியுள்ளார்.

ad

ad