புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2012


கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை ௭த்தரப்புக்கு வழங்குவது ௭ன்பது தொடர்பாக இன்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலொன்று மேற்கொள்ள இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மு.கா.வின் தலைவர் ரவூப்ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர் உயர்பீட உறுப்பினர்கள் ௭ன்போர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


இதுவரை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங் கத்துடன் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுக்குள் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளதை முஸ்லிம் காங்கிரஸூக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதற்கு அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸூக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் பட்சத்தில் அதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ஹாபீஸ் நசீர் அகமட்டுக்கு வழங்குவதற்கான சமிக்ஞைகளை ரவூப் ஹக்கீம் வெளிப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால் அம்பாறை மாவட்டத்தைச் சேர் ந்த முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறு ப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது ௭தி ர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரையே முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென்றும் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்திக்கொ ண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சம்மதத்தை தெரிவித்துள்ளதாகவும் மத்திய அரசில் இரண்டு அமைச்சர் பதவியும் மூன்று பிரதியமைச்சர் பதவிகளையும் கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியும் சபை முதல்வர் பதவி அல்லது கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுப் பதவிகளையும் கோரியதாகவும் இதனை அரசாங்கத்தின் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ad

ad