புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012


ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் சற்றுமுன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு ஐ.நா. தலைமையக காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு வலையத்திற்குள் இருக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக மறுபடி குடியேற முடியாமை காரணமாக வலிகாமம் மற்றும் சாம்பூர் பகுதிகளின் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள்,

அவர்களுடைய பூர்வீக கானிகளை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்டு வருகின்றமை, அபிவிருத்தி என்ற போர்வையில் பல பகுதிகளில் பெரும்பான்மை இனத்தை குடியமர்த்துவதன் ஊடாக, வடக்க கிழக்கின் சனத்தொகை கட்டமைப்பை மாற்றி அமைக்கும் உள்நோக்கத்துடன் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கு காலாசார மற்றும் மத ரீதியான பெறுமதியுள்ள இடங்களை அவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்ற நிலை, பல பகுதிகளை இராணுவ மயமாக்குதல், நபர்கள் காணாமல் போதல், தடுத்து வைத்தல், பொறுப்பு கூறல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வொன்று இன்னும் முன்வைக்கப்படாத நிலை ஆகிய விடயங்கள் இச் சந்திப்பின்போது கலந்துரையாடபட்டது.

அத்துடன், எல்.எல்.ஆர்.சி. முன்வைத்த பரிந்துரைகள் மற்றும் 2012 மார்ச் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களை செயற்படுத்தும் கலப்படமற்ற எண்ணம் அரசிட்கு இருக்கின்றதா என்பது பற்றியும் உரையாடப்பட்டது. இதன் போது பரிமாரப்பட்ட கருத்துக்கள் சுதந்திரமாகவும் ஒழிவுமறைவின்றியும் முன்வைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

ad

ad