புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2012

வடக்குத் தலைமைகள் மாற்றாந்தாய்ப் பிள்ளைகள்போல் எம்மை கருதுகின்றார்கள் -சி.சந்திரகாந்தன்
நாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. மாங்கேணி மக்கள் தெளிவாக இருக்கின்றனர்
என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். 
 

மாங்கேணி பிரப்படிமடுப் பகுதியில் இடம் பெற்ற அரசியல் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்குத் தலைமைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எம்மை மாற்றாந் தாய்ப் பிள்ளைகளாகவே அவர்கள் கருதுகின்றனர். அதனால் தான் வெருகலாற்றில் எம்மீது படையெடுத்து எம் போராளிகளைக் கொலை செய்தனர்.நிச்சயமாக இத் தேர்தலில் தோற்கப் போகும் கூட்டமைப்பினர் ஒரேயொரு அறிக்கையினை மாத்திரம் பத்திரிகை வாயிலாக விட்டு எம் மக்களைக் கைவிட்டு ஓடி விடுவர். இதைத்தான் அவர்கள் 62 வருட காலமாகச் செய்து வருகின்றனர். நாம் அழிந்த போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தாம் மட்டும் சுக போகிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் எமக்குத் தேவையா? நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

வாகரைப் பிரதேச சபைத் தவிசாளர் சூட்டி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா, மண்முனை மேற்குப் பிரதேச சபை தவிசாளர் பிறைசூடி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad