புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2012

யாழ். கே.கே.எஸ் வீதியில் காணப்படும் சேதமடைந்த வாய்க்கால்; போக்குவரத்துக்கு இடையூறு; நுழம்பு பெருக்கம்; உரிய துறையினர் பாராமுகம். மக்கள் குற்றச்சாட்டு
 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்று
சேதமடைந்து நீண்ட நாட்களாக திருத்தப்படாது உள்ளமை குறித்து அவ் வீதியால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முக்கிய சந்தியில் இவ் வாய்க்கால் உள்ளதுடன் கழிவு நீர் தேங்கி நுழம்பு பெருகும் அபாயமும் உள்ள நிலையிலும் அதனை சீர் செய்ய உரிய துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்துள்ள சந்தியிலேயே குறித்த வாய்க்கால் உள்ளது. வீதியைக் குறுக்கறுத்து உள்ள இவ் வாய்க்காலில் அரைப் பாகம் உடைந்து சிதைந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கடந்த இரண்டு மாதங்களாகக் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் இப் பகுதியை வீதி அபிவிருத்தி அதிகார சபை மஞ்சள் நிறப் பட்டி கட்டி அவதானிப்பு குறியிட்டுள்ள போதும், இன்னமும் திருத்தப்படாதுள்ளது. இதனால் இவ் வீதியால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலையை எதிர்கொண்டு வருகின்றன என போக்குவரத்தில் ஈடுபடும் வாகனச் சாரதிகள் தெரிவித்தனர்.

எனவே இவ் வாய்க்காலை விரைவாக திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது காங்கேசன்துறை வீதியில் வீதி அகலிப்புப் பணி நடைபெற்று வருகின்றது. அத்துடன், வணிக நிலையங்களின் வாகனங்கள் தமது பொருட்களை இறக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட வேளையில் போக்குவரத்து வாகனங்கள் இவ் வாய்க்காலைக் கடக்க பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன.

அத்துடன் இவ் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நுழம்பு பெருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளின் போது எடுக்கப்படும் கழிவுகளும் இவ்வாய்யக்காலுக்கு அருகில் கொட்டப்படுகிறது. இதனால் டெங்கு நுழம்பு பெருகும் இடமாக இது அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

டெங்கு பெருகும் இடங்களென பொதுமக்களின் வாழிடங்களை சுற்றிச் சுற்றிப் பார்வையிட்டு அம் மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் சுகாதாரப் பிரிவினர் ஏன் இவ் வாய்யக்காலை கவனிக்கவும் உரிய துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
 





ad

ad