புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2012



கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழர்களின் தன்மானத் தேர்தல் - வெள்ளிமல


நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கட்சி ரீதியானதல்ல. தமிழர்களின் தன்மானத் தேர்தல. முள்ளிவாய்க்காலில் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கும், ஜெனிவாவில் நமது உரிமையை வென்றெடுப்பதற்கும் நடைபெறுகின்ற தேர்தலாகும் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக்
கட்சி சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை( வெள்ளிமலை) நேற்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற இப்பிரதேசத்துக்கான பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணத் தன்மானத்தமிழர்கள், பாலத்தையும், விளையாட்டு முற்றத்தையும், கட்டங்களையும், வீதிகளையும் கண்டு சோரம் போகமாட்டார்கள் என்பதை நிரூபித்துக் காட்டுகின்ற நன்னாள், பொன் னாள் அந்தத்திருநாள் செப்டெம்பர் 8ஆம்திகதியாகும். கடந்த காலங்களில் நமது தமிழ் இனம் வாக்களிப்பதும் கீழ் நிலையில் இருப்பதும் நீங்களும் நானும் அறிந்ததாகும்.

ஆனால் எதிர்வரும் தேர்தலில், மக்களாகிய நீங்கள் கள்ளவாக்கிடுபவர்களுக்கு இடம் கொடாது, பகல் 12 மணிக்கு முன்னரே வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள். அந்த வாக்குரிமை மூலம் நாம் இழந்த உரிமையை மீளப் பெறுவதற்குள்ள வாய்ப்பு இதுவே ஆகும்.

இக்கிராமம் இன்று நேற்றல்ல அன்று தொட்டு இன்றுவரை, தமிழத்; தேசியத்தை ஆதரித்து தமிழ் இனத்தின் மீது பற்றுள்ள கிராமம். கிழக்கிலங்கையில் தங்க மாலையிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களைக் கௌரவித்த கிராமம். அதே நேரம் இரத்தத்திலகமிட்டு வரவேற்ற கிராமமுமாகும்.

எனவே இதனை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை. இது உலகமறிந்த உண்மை. அதனால் வருகின்ற தேர்தலில் தமிழ் தேசியத்தை ஆதரித்து உங்களது வீடான வீட்டுச்சின்னத்திற்கும் எனது இலக்கமான 8க்கும் வாக்களித்து தமிழ் தேசியத்தை வெல்லச் செய்யுங்கள்.

ad

ad