புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2012


கிழக்கு தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடன் இணைவது குறித்து தீர்மானம்: ரவூப் ஹக்கீம்
கிழக்கு தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து கிழக்கில் ஆட்சி அமைக்கும் தீர்மானத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சரும்,முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம்,
தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் இரண்டு கட்சிகளுக்குமே அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் கூட்டிணைவது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸுடன் இது தொடர்பில் எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் கூட்டிணைவு குறித்தோ, அல்லது தேர்தல்களுக்காக ஒன்றாக செயறப்படுவது தொடர்பிலேயோ எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் தேர்தலின் பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ad

ad