புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2012


பாலியல் தொழிலை இலங்கையில் சட்ட ரீதியாக்குமாறு கொழும்பு மாநகரசபை ஐதேக உறுப்பினர் கோரிக்கை!
இலங்கையில் நாட்டில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நதில் மாலகொடவே இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்காமை காரணமாகவே சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைச் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் மாநகரசபையின் மற்றுமொரு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பிரேமஜயந்த கஸ்தூரியாரச்சி பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இந்த பிரேரணை தொடர்பில் கருத்துரைத்த போது நதில் மாலகொட இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஆண் சமூகம் பாலியல் இச்சை அதிகம் கொண்டதாக அமைந்துள்ளது.
எனவே, பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குவதில் தவறில்லை.
இவ்வாறு பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்காத காரணத்தினால் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியருக்கு எதிரான வன்கொடுமைச் சம்வங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என நதில் மாலகொட கொழும்பு மாநகரசபை அமர்வுகளில் கலந்து கொண்ட உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

ad

ad