புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2012



போலீஸ் துப்பாக்கிச் சூடு! திருச்செந்தூர் அருகே மீனவர் உயிரிழப்பு!





கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் தடியடி நடத்தியதை கண்டித்து தூத்துக்குடி,  திருச்செந்தூர், புதியதாழை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் கண்டன போராட்டம்  நடத்தி வருகின்னர்.
இதனிடையே திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கிராமத்தின் மீனவர்கள் திரண்டு வந்து  திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் மாலை சுமார் 5 மணி அளவில் சாலை மறியல்  போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசியும், பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து  செல்லாமல் இருந்ததால், தடியடி நடந்தது. மேலும் துப்பாக்கிச் சூடும் நடந்தது. அதில்  அந்தோணி ஜார்ச் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தோணியின் இடது விலாவின் பக்கம் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

மீனவர் ஒருவர் உயிரிழந்த காரணத்தால் திருச்செந்தூர் அமளி நகர், மணப்பாடு, குலசேகரப்பட் டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் பதற்றத்தில் உள்ளன.
அந்தோணி உடன்குடியில் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு டிரக்கர் வண்டியில் சென்றார். மணப்பாடு கிராமத்தில் வந்தபோது, அந்த வண்டியில் இருந்து இறங்கியவர் தனது கிராமத்திற்கு செல்லும்போது மீனவர் மறியல் நடந்துள்ளது. அப்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தால், பலர் சிதறி ஓடினர். இதைக்கண்ட அந்தோணியும் ஓடியுள்ளார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது விலாவில் குண்டு பாய்ந்தது. அதில் அவர் உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ad

ad