புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2012


ராஜினாமா வாபசா? டைரக்டர் அமீர் அறிக்கை
டைரக்டர்கள் சங்க செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அமீர், நேற்று தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அமீர், ராஜினாமாவை வாபஸ் பெறவில்லை என்று தெரிவித்தார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

``தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பாரதிராஜா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எனது ராஜினாமாவை வாபஸ் பெறும்படி, டைரக்டர்கள் பாலசந்தர், பி.வாசு, மனோஜ்குமார், செல்வமணி, விக்ரமன், லிங்குசாமி ஆகியோர் என் மீது அன்பு வைத்து, நம்பிக்கை வைத்து, மீண்டும் இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள சொன்னார்கள்.

இயக்குனர், உதவி இயக்குனர் என்ற வேற்றுமை பாராமல் அதன் ஒற்றுமைக்காகவும், சில தீய சக்திகள் சங்கத்துக்குள் நுழைந்து விடாமல் தடுக்கும் நோக்கத்துக்காகவும், நன்கு யோசித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அதை மீண்டும் மாற்றுவது சரியானதாக இருக்காது என்ற காரணத்துக்காகவும், எனது ராஜினாமா முடிவை வாபஸ் பெறவில்லை.

வருகிற தேர்தல் வரை சங்க பணிகளில் ஒரு உறுப்பினராக இருந்து, இன்னும் அதிக கவனம் எடுத்து செயல்படுவேன்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் அமீர் கூறியிருக்கிறார்.

ad

ad