புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க வேண்டுமென நேரம் ஒதுக்கிக் கேட்ட முஸ்லிம் காங்கிரஸ் காக்க வைத்து காலைவாரி விட்டதாக கூட்டமைப்பு வன்னி மாவட்ட ௭ம்.பி. செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டினார். 
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக கூட்டமைப்பைச் சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தரும்படி முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில்

கோரப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இரவு 8 மணிவரை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் வராத காரணத்தால் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.

பின்னர் செயலாளர் ஹசனலியுடன் தொடர்பு கொண்டபோது தலைவர் ரவூப் ஹக்கீம் அலரி மாளிகையில் ஒரு முக்கிய பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் அவர் திரும்பியதும் அறிவிப்பதாக தெரிவித்தாராம். இருந்தும் அதன் பின்னர் தொடர்பு கொள்ளவில்லை ௭ன்றும் இரா. சம்பந்தன் உட்பட கூட்டமைப்பு ௭ம்.பி. க்கள் வெகுநேரம் காத்திருந்து விட்டு வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதாகவும் செல்வம் அடைக்கலநாதன் ௭ம்.பி. தெரிவித்தார்.

ad

ad