வெள்ளி, செப்டம்பர் 07, 2012


மட்டக்களப்பில் வாக்குச்சாவடிகளை நோக்கி வாக்குப் பெட்டிகள்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று காலை வாக்கெண்ணும் மத்திய நிலையத்திலிருந்து வாகனங்கள் மூலம் சகல வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கெண்ணும் மத்திய நிலையமான மட்டு- வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் சென். மெதடிஸ்த மத்திய கல்லூரிகளில் பொலிசாரின் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்வதற்காக இலங்கை போக்குவரத்துசபை பேருந்துகள், தனியார் பேருந்துகள், தனியார் வான்கள் மற்றும் அரச வாகனங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.