புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012



தீக்குளித்த இடத்திலேயே விஜயராஜின் உடலுக்கு  பொதுமக்கள் அஞ்சலி
சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ், ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்தார்.    அவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்யக்கூடாது என்றும்,   உடலை வாங்கமாட்டோம் என்றும் உறவினர்கள். தமிழுணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவந்தனர்.

’’எப்.ஐ.ஆர் காப்பியை பார்க்க அனுமதிக்க வேண்டும்,  கைப்பற்றப்பட்ட விஜயராஜ் எழுதிய 36 பக்க கடிதத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும், மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, ராஜபக்சே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். 

மேஜிஸ்ட்ரேட்டிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’’ என்ற நான்கு கோரிக்கையை நிறைவேற்றினால்தான் உடலை வாங்குவோம் என்றனர்.

கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு,  எப்.ஐ.ஆர். காப்பியை போலீசார் காட்டினர்.  கைப்பற்றப்பட்ட விஜயராஜின் 36 பக்க கடிதம் ஒப்படைக்கப்பட்டது.  மாஜிஸ்திரேட்டிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலம் கொடுக்கப்பட்டது.   பிரதமர், சோனியா, ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்வது மட்டும் இப்போது முடியாது.  அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை போலீசார் விளக்கினர்.

இதையடுத்து உறவினர்களின் ஒப்புதலோடு விஜயராஜின் உடல் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டது.  போஸ்ட்மார்டத்திற்கு பின்னர் விஜயராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
விஜயராஜ் தீக்குளித்த சேலம் பழையபேருந்து நிலையத்திலேயே அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ad

ad