புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2012


ராஜபக்சவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அதிமுக மனு

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச வருகை தர உள்ளார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அரசியல் கட்சி ஒன்றில் இத்தகைய மனு கொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad