புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2012


யாழ்.மக்களிடம் மகிந்த ஆட்சியில் சுதந்திரம் கிடைக்கிறதா என வினவிய சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், யாழில் உள்ள நல்லூர் கந்தன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். அத்தோடு யாழில் மணியம் தோட்டப் பகுதியிலுள்ள மீளக்குடியமர்ந்த மக்களைப் பார்வையிட்டுள்ளார்.
ஏ9 தரைப்பாதை வழியாக வந்த சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் பல வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லவுள்ளதுடன் நாகவிகாரை, நாகதீபம் ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.
அத்தோடு யாழில் பல சமயத் தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இரண்டாம் இணைப்பு:
மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் அடிப்படை வசதிகளும், சுதந்திரமான வாழ்வும் கிடைக்கின்றதா என யாழ்ப்பாண மக்களிடம் வினவியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு தான் இப்போது விரும்பமாகவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்த சந்திரிக்கா தான் இயக்கிவரும் அரசசார்பற்ற நிறுவனத்தின் மூலம் அரியாலை, அச்சுவேலி பகுதி மக்களுக்கு சூரியக்கலங்களை (சோலர்) வழங்கினார்.
சுமார் 40 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருப்பதாக அவர் கூறியதுடன், ஏ9 வீதியால் தான் பயணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுடைய வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற சந்திரிக்கா மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் அடிப்படை வசதிகள் கிடைக்கின்றனவா? மக்கள் இப்போது சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளதா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இந்த ஆட்சியின் திருப்தி தொடர்பாகவும், இன்னமும் நிறைவு செய்யப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் அவர் மக்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனினும் இந்த விஜயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. மிகவும் இரகசியமான முறையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை யாழில் உள்ள சில வழிபாட்டுத் தலங்களுக்கும் விஜயம் செய்திருந்த அவர் வழிபாட்டிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad