புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2012


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் தொடரும்: வைகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, கரூரில் மதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து வைகோ பேசியது:
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், தமிழகத்துக்கு 250 மெகாவாட் மின்சாரத்துக்கு மேல் கண்டிப்பாக கிடைக்காது. கூடங்குளம் அணுக்கழிவுகளை அகற்றும் முறை குறித்து தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அணு உலையால் அந்தப் பகுதி பொதுமக்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
அணுஉலையை எதிர்த்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப் புகையை வீசுகின்றனர்; தடியடி நடத்துகின்றனர். உச்சகட்டமாக, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மீனவர் பலியாகி உள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நீதிபதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
"மாய' வலையில் வீழ்ந்துவிடாதீர்கள் என்று கூறுகிறார் முதல்வர் ஜெயலலிதா. மக்களைக் காக்கவே நாங்கள் வலை விரிக்கிறோம். இதை வாக்கு வங்கி அரசியலுக்காக செய்யவில்லை. வருங்கால சந்ததியினரின் நலனுக்காகவே செய்கிறோம்.
இலங்கையில் பாகிஸ்தானும், சீனாவும் காலூன்றி வருகின்றன. இது இந்தியாவுக்கு நல்லதல்ல. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், முதலில் இலக்காவது கூடங்குளம் அணுமின் நிலையமே.அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறியுள்ளார். இதை அவர் நிரூபிக்க வேண்டும்.
அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். அணு மின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் தொடரும் என்றார் வைகோ.

ad

ad