புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012


தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவின் மனு மீதான விசாரணை 12ம் திகதி ஆரம்பம்!
இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் இருந்தபோது, ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவரை கைது செய்ய சென்னை செசன்ஸ் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் இலங்கைக்கு சென்றுவிட்டதால் அவரை கைது செய்ய முடியவில்லை.
இதையடுத்து 1996-ல் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை  உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து டக்ளஸ் தேவானந்தா சார்பில் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததை ரத்துசெய்ய வேண்டும் என்றும், கொலை வழக்கு தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயார் என்றும் டக்ளஸ் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 12ம் தேதி தொடங்கும் என்று 4-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிதிப ராஜகோபாலன் தெரிவித்தார்.
தமிழ் நாட்டுக்கு வந்தால் தனது உயிருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து இருப்பதாகவும், தனது வருகையின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், இதன் காரணமாகவே கோர்ட்டில் நேரில் ஆஜராவதை தவித்து வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ad

ad