புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012

கோத்தாவிடம் கேள்விகளால் வேள்வி செய்த ரஞ்சன் மத்தாய்
13 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து அண்மையில் டில்லி சென்ற பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் கேள்விக்கணைகளைத் தொடுத்தார் எனத் தெரியவருகிறது.
கடந்தவாரம் புதுடில்லி சென்ற கோத்தபாய அங்கு உயர்மட்ட இந்திய அதிகாரிகளுடன், பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுகளை நடத்தியிருந்தார்.


இதன்போது ரஞ்சன் மத்தாயுடனான சந்திப்பில் 13 ஆவது திருத்த ஒழிப்புக் கோஷ விவகாரம் குறித்து சூடாக விவாதிக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனியையும் கோட்டாபய சந்தித்திருந்தார்.

இந்நிலையில், கொழும்பு திரும்பிய கோட்டாபயவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடை யில் இருந்து வரும் பிரச்சினையினால், இந்திய இலங்கை இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படுமா? 12 ஆவது திருத்தம் பற்றி இந்தியச் சந்திப்பில் பேசப்பட்டதா எனக் கேட்கப்பட்ட போது, இந்திய வெளிவிவகாரச் செயலர்  ரஞ்சன் மத்தாயுடனான சந்திப்பின்போது 13 ஆவது திருத்தச்சட்ட விவகாரம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார் என்றார்.
எனினும், உள்நாட்டு அல்லது பிராந்திய விவகாரங்களினால், இந்திய இலங்கை உறவுகள் பாதிக்கப்படாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு சக்திகள் இலங்கையை தமது தளமாகப் பயன்படுத்தக் கூடும் என்று இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

அதற்கு, இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய வெளிநாட்டு சக்திகளுக்கு இலங்கை இடமளிக்காது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதி அளித்துள்ளார்.

ad

ad