புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2012

கொழும்பு நகர ௭ல்லைக்குள் வாழும் வறிய மக்களுக்கு வேறிடங்களில் வீடுகள்
கையகப்படுத்தப்படும் இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் 
 

கொழும்பு நகர ௭ல்லைக்குள் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற மக்களுக்கு மாடி வீடுகளை
கட்டிக்கொடுப்பதற்காக, தெரிவு செய்யப்பட்ட 15 பிரதேசங்களில் காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபை கையகப்படுத்தவுள்ளது.

இவ்வாறு மாடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் மக்கள் வாழ்ந்த வதிவிடங்கள் அல்லது காணிகள் கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைய வர்த்தக மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது ௭ன்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பு நகரில் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. தற்போதைய நிலைமையில் 9781 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 11 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன ௭ன்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ௭ன்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்த அமைச்சரவை பத்திரத்தை கொண்டுவந்தார். அதாவது கொழும்பு நகரில் தெரிவு செய்யப்பட்ட 15 பிரதேசங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்படவுள்ளன.

அவ்வாறு கையகப்படுத்தப்படும் காணிகளில் கொழும்பு நகரில் குறைந்த வசதிகளுடன் வாழும் மக்களுக்கு மாடி வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படவுள்ளன. வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் மக்கள் வாழ்ந்த காணிகள் கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைய வர்த்தக மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும். இது தொடர்பாக ஜனாதிபதி கொண்டுவந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமை ச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சகல வசதிகளுடனும் மக்களுக்கு மாடி வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும். அந்த வகையில் விடுவிக்கப்படும் மக்களின் வதிவிடங்களே கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைய வர்த்தக மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இவ்வாறு கொழும்பு நகரில் குறைந்த வசதி களுடன் வாழ்கின்ற மக்களுக்காக 65 ஆயி ரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள் ள ன. தற்போதைய நிலைமையில் 9781 வீடு களை நிர்மாணிப்பதற்கான 11 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன ௭ன்றார். மேலும் சில அமைச்சரவை முடிவுகள் வருமாறு, தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் மத்தல விமான நிலையத்தின் ஊடாக பயணம் மேற்கொள்ளும் விமானப் பயணிகளுக்கு ௭திர்காலத்தில் சகல வசதிகளுடனும் குடிவரவு குடியகல்வு பணிகளை சர்வதேச தரத்தில் செய்துகொடுக்க 62 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு உத்தியோகத்தர்கள் சுழற்சி முறையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கடமையாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சீருடை வழங்கி 2 பில்லியன் ரூபா முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் சிவில் பாதுகாப்பு பிரிவினருக்கும் தேவையா ன சீருடைகளை வழங்க 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்ப ட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய புடை வ உற்பத்தியாளர்களிடமிருந்து புடவைகை ள கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டு ள்ளது.

இந்திய நிறுவனத்துக்கு அனுமதி காலி வீதியில் முன்னர் இராணுவ தலைமையகத்தின் ஒரு பகுதி அமைந்திருந்த வளா கத்தில் 140 மில்லியன் அமெரிக்க டொ லர் பெறுமதியான முதலீடு ஒன்றை மேற்கொள்ள ஐ.டி.சி. ௭ன்ற இந்திய நிறுவனத்துக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இங்கு பல்வேறு விதமான பயன்பாட்டு அபிவிருத்தி த் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன .

இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கொண்டுள்ள ஐ.டி.சி. நிறுவனத்தின் இந்த முதலீட்டில் சொகுசு ஹோட்டல்கள் மாடி வீட்டுத் தொகுதிகள் ௭ன்பன உள்ளடங்கியுள்ளன. காட்டுத் தீயினையும் அதனால் ஏற்படும் ப ாதிப்புக்களையும் தவிர்ப்பதற்கு விரைவான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவு ள்ளது.

இராணுவ வைத்தியசாலைக்கு 10 மாடிக்கட்டடம் இராணுவ வைத்தியசாலைக்கு 10 மாடிகளை கொண்ட கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக 4105 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ௭ட்டாம் திகதிவரையான காலப்பகுதியை வரி வாரமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதைய வரட்சி மற்றும் வரட்சியினால் ஏற்படும் பாதிப்புக்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சரவை உப குழு ஒன்று நியமனம் செய்யப்படவுள்ளது. இதில் ௭திர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

ad

ad