புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012


விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற கருதப்படும் ஒருவரை கனேடிய குடிவரவுத்துறை அதிகாரிகள், நாடு கடத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர் கடந்த 15 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். குறித்த தமிழர், கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன், சர்வதேச தமிழர் இயக்கத்திலும் அங்கம் வகித்துள்ளார்.
 
எனவே அவர், கனடாவில் வசிக்க முடியாது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கனேடிய குடிவரவு திணைக்கள பேச்சாளர் பெய்த் ஜோன் தெரிவித்துள்ளார்.
 
1998 ஆம் ஆண்டு கனடாவினால் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இவரின் பெயரை கனேடிய குடிவரவு திணைக்களம் வெளியிடவில்லை. 1986 ஆம் ஆண்டு கனடா ஒன்றாரியோவில் மாணிக்கவாசகம் சுரேஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தமிழர் இயக்கம் இலங்கையில் விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பை மேற்கொண்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
இந்தநிலையில் 2008 ஆம் ஆண்டில், சர்வதேச தமிழர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்டது அத்துடன் கடந்த வருடம் அதன் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad