புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2012

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் திருட்டு: கோபமடையும் பொதுமக்கள்
பெர்ன் மாநிலத்தில் உள்ள பீல் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த 16 இயந்திரப்படகுகளில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் திருடு போயுள்ளன.
இவற்றைத் திருடியவர்கள் குறித்து துப்பு கொடுக்கும்படி மாநிலக் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இத்திருட்டு அதிகாலையிலோ நடந்திருக்கக்கூடும்
என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
பீல் ஏரியின் கிழக்கு பக்கத்தில் டாஃபலென் படகுத்துறையின் அருகே இந்தப் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. திருடு போன இந்தப் படகுகளின் இயந்திரங்கள் பல்லாயிரம் ஃபிராங்க் மதிப்புடையனவாகும்.
ஏரிப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான நபர்களை பொதுமக்கள் எவரேனும் பார்த்திருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.
இத்திருட்டு குறித்து பொதுமக்களை மிகுந்த கோபம் அடையச் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் எல்லைகளை எல்லாப்பக்கமும் திறந்துவிட்டதால் ஐரோப்பாவின் களவுக்களமாக இந்நாடு மாறிவிட்டது என்றனர். நாட்டின் உள்ளே வருவதற்கும் வெளியே போவதற்கும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது, என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad