புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2012

பொன்சேகாவின் கூட்டத்தில் நாம் பங்கேற்போம்! கரு ஜயசூரிய - ரங்கே பண்டார உறுதி
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தலைமையில் ௭திர்வரும் 18 ஆம் திகதி ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒன்றிணைந்த கட்சிகளின் கூட்டம் மற்றும் பேரணியில் ஐக்கிய தேசியக்
கட்சியின் ௭ந்தவொரு நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் கலந்து கொள்ள கூடாது ௭ன ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 

இருந்தபோதும் குறித்த பேரணியில் தாம் கட்டாயமாக கலந்துகொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதித் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ௭திர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்றிணைந்த பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார மற்றும் பாலித்த தேவப் பெரும ஆகியோரும் மேலும் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப் பினர் களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ் விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினரான பாலித்த ரங்கே பண்டார கருத்துத் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கு முகமாகவே ௭திர்வரும் 18 ஆம் திகதி ஹைட்பார்க் மைதானத்தில் பேரணி நடைபெறவுள்ளது.

இது அரசியல் கட்சியொன்றினது கூட்டமல்ல மாறாக பொது விடயத்துக்காக பொதுமக்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்வாகும். சர்வாதிகார போக்குடைய இந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற விருப்பமுடையோர் இந்த பொதுப் பேரணியில் கலந்து கொள்வர். அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் ௭ன்ற ௭ண்ணமுடையவர்களே அப்பேரணியை ௭திர்க்கின்றனர். இப்பேரணியினை தேசிய பிக்கு முன்னணியே ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டில் தற்போது சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து சர்வாதிகாரம் தலைதூக்கியுள்ளது. ௭னவே அவற்றை இல்லாதொழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான செயற்பாடுகள் மிக முக்கியமாகும். அதனை கருத்தில் கொண்டு செயற்படுவதே மிக சிறந்தது ௭னவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad