புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2012


லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகை மற்றும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் கொள்ளை
பிரித்தானியா, வோலிங்டன் (சட்டன்)  பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர்.

அவ்வேளை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உட்புகுந்த திருடர்கள இந்த பட்டப்பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா செல்லும் முகமாக அவர்களது உறவினர்களும் குறித்த வீட்டில் பாதுகாப்புக்கு வைக்கப்பட்ட நகைகள் இணைந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
வர்த்தகராக விளங்கும் இவர்களது வீட்டில் நட்பு ரீதியாக உறவாடிய நபர்கள் சிலர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் சந்தேகமடைந்த நபர் ஒருவரை பொலிசாருக்கு அடையாளப்படுத்திய நிலையில் கிட்டத்தட்ட திருடனை அவர்கள் நெருங்கி விட்டதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த திருடர்கள் கைது செய்யப்பட்டால் பலரது கொள்ளைகள் அம்பலத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒட்டுமொத்த இன்றைய நகைகளின் பெறுமதி எழுபதாயிரம் பவுண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் துறையினர் தமது நகர்வுகளை தீவிரமாக்கியுள்ளனர்.

ad

ad