புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2012

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாகப் பந்துவீசிய மும்பை அணிக்கு அபராதம் 
 சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததற்காக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 



நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை அணி தான் பந்துவீசியபோது, குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னும் மேலும் ஒரு ஓவர் வீச வேண்டியிருந்தது.

இதனால், மும்பை அணி கேப்டன் ஹர்பஜன் சிங்குக்கு 1500 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மும்பை அணியின் மற்ற வீரர்களுக்கு தலா 750 டாலர்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தனது அடுத்த ஆட்டத்திலும் மும்பை அணி இதே தவறை செய்யும் பட்சத்தில், கேப்டன் ஹர்பஜன் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும்.

சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மும்பை அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் டர்பனில் நாளை மோதுகிறது.

ad

ad